Saturday, July 16, 2016

செல்லக் கிளிகள்


குறை கூறும்
கிடங்குக்குள் இ்ருந்து
தவித்தபடியிருக்கும்
நிலைமை
எதுவும்.கற்றுத்தறாதா
செல்லக் கிளிகள்
ஏன்
திரும்பத் திரும்ப
ஒன்றை
ஒரே சாயலில்
சொல்லுகிறது

பகல்கள்


உள்ளங்கைக்குள்
அடங்கிய உன் பகலை
ஆரஞ்சு பழத்தொப்பையென
உரிக்கும்பொழுது
தடுமாற்றங்களும்
சிற்சில பொய்களும்
மறைக்கப்பட்ட அறை
ரகசியங்களும்
விரல்கள் நனைக்கும்
ஈரமென
கசிந்து நிரம்புகிறது
அறிந்தும் அறியாததைப் போல
இன்றைய நம் பகலின்
சிறு துண்டைப் பிய்த்து
ருசித்துக்கொள்கிறோம்
அவரவர்களின் பகல்கள்
மற்றவர்கள் கைகளில்
அருஞ்சுவை

வெட்டி வேலை செய்பவன்


அவனிடம்
யாரும்
குழம்பிக் கொள்ள தேவையில்லை
அவனிடம்
யாரும
நம்பிக்கை கொள்ள தேவையில்லை

அவனிடம்
யாரும்
நேரத்தை வீணாக்கி விட தேவையில்லை
இந்த உலகத்தில்
ஒருவன்
வெட்டிவேலை செய்கிறான் என்றால்
அன்பைப் பற்றி
காதலைப்பற்றி
கடவுளைப்பற்றி
சதா
பினாத்திக் கொண்டே யிருப்பவனாகத்தான்
இருப்பான்
அவனிடம்
யாரும்
தங்களின் பொன்னான நேரத்தை
செலவிட வேண்டிய அவசியமில்லை
அந்த நேரம்
தங்களின் செல்ல நாய்க்கு உணியெடுத்து
நெருப்பில் வீசிக்கொண்டிருக்கலாம்
கச்சிதமான உடையமைப்புளுக்கான
தேர்ந்த தையல்காரரொருவரை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம
விருப்பத்திற்குரிய
நெகச் சாயத்தை ஆன் லைனில்
வாங்க முற்படலாம்
ரகசியம் சார்ந்த உற்வுமுறைகளுக்கேற்ப
வீரியத்திற்க்கான மூலிகைகளை
நெருங்கிய நண்பர்களிடம்
ஆலோசணை கேட்க ஆவலாகலாம்
ஆகவே
தங்களின் பொன்னான நேரத்தை
விரயமாக்கிவிட தேவையேயில்லை
அப்படிப்பட்ட ஒருவனுக்காக
யாரும்
வருத்தப்படவும் தேவையேயில்லை
நாட்கள் வீணாக
வரவே வராத.வருகைக்காக
இறங்கவே இறங்காத
பறவைகளுக்காக
எதற்காக
சொற்களை இறைத்துக் கொண்டிருக்கிறாய்

கை சூப்பி


புரிந்து கொள்வதற்கும்
புரியாமலிருப்பதற்குமான
பெயர் குழப்பங்கள்
பெரும்
சிரமத்திற்குள்ளாக்குபவை

கவிஞனொருவன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
விமர்சகன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
புரட்சியாளன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
கைசூப்பி அழுதான்
என்று
சொல்லியிருந்தால்
இத்தனை மெனக்கெடல்கள்
தேவைப்பட்டிருக்குமா
கனவே

தழும்புகள்


இன்னும் தழும்புகள்
மறையவில்லை
அன்பை
பிரியத்தை
காதலை
முத்தங்களை
இன்னும் பிற
சொச்சங்களை
மூக்குக் கண்ணாடியைப் போல
இறக்கி வைக்கிறேன்
மேலும்
கொஞ்சம்
இடைவெளிக்காக
கண்ணீருக்காக
துயரத்திற்காக
மறைப்பதைப்போலான
நிர்பந்தங்களுக்காக

டா டா


கையசைக்கிறேன்
இரவே
அதற்குள்
ஓட்டத்தை
துவங்கிவிட்டாய்
எனை இழுத்து வந்து
தூர
எறிந்துவிட்டு
திரும்பிக் கொண்டிருக்கிறாய்
பகலின் அரக்க சப்தங்களுக்கு
இரையாக்கும் படி
யார்.உத்தரவிட்டது
ஆயினும்
வாழ்த்துக்கள்
போய்
வா
இரவே
டா டா

மீனின் பாடல்


செதில்களில் உலரா
காயங்களில்
நீந்திக் கொண்டிருக்கும்
மீனின் பாடலில்
ஈரம் அசைகிறது

இருள் நதியில்
கரையும்
ஆயுளின்.நிறங்கள்
வெளுக்கும்
நேரத்திலல்லவா
வுன்
காதலை
பரிசளிக்கிறாய்

விளையாட்டு


தெற்கு
வசந்தத்தை
அழைப்பதைப் போல
அழைத்துக் கொண்டிருப்பது

இங்கிருந்து
தெரிகிறது
விளையாட்டு
தாமதமாகவே
நடக்குமென
நம்புவோமாக

மயிர்


மயிர்
என்பதன்
பொருள்
வெறும்
இழி
சொல்லாகவோ
நிராகரிப்பின்
அடையாளச் சின்னமாகவோ
கருதுவதில்
உடன்பாடில்லை
அது
சொல்லின்
இடத்திலிருந்து
பெறும்
குரலைப் பொறுத்தது
அதன்
வாழ்வைப் பொறுத்தது
இதயத்தின்
ஆழத்தைப் பொறுத்தது
வகைமையைப் பொறுத்தது
என்னைப் பொறுத்தவரை
பொன்னுக்கும்
புகழுக்குமான
உயரத்தை
விட
வலிமை மிக்கதாகவே
புலப்படுகிறது
சுவைக்க
விருப்பமிருப்பின்
இருக்கையை
கடந்தும்
முயற்சிக்கலாம்
தடையும்
கூச்சமும்
மனதைப் பொறுத்ததே
சுவைக்க
விருப்பமிருப்பின்
இருக்கையை
கடந்தும்
முயற்சிக்கலாம்
தடையும்
கூச்சமும்
மனதைப் பொறுத்ததே

சிறு ஒளி


சாய்ந்து மறைக்கும்
வாழ்வினிிடையே
இச்
சிறு
ஒளி
நகர்த்திவிடுகிறது
இன்னொரு
எல்லைக்குள்
.
அவரவர்க்கு
ஒவ்வொரு
எல்லை
அது
முடிவிற்கும்
முடிவின்மைக்குமாகப்
புலப்படும்
ஒரு
பூ
அல்லது
அசையும்
சுடர்
விழுந்து
விழுந்து
உச்சி மதிலை
அடைந்த
சேவலின்
முன்

இறையாகி
விட
சம்மதமே
நெளிந்த
புழுவாகவேணும்

முத்தமிடுகிறேன்


பிளந்து
உரிந்த
உதடுகளின் வழி
காமத்தை
ஒளித்திருக்கிறேன்
மனிதனாக
நடிக்க வரவில்லை
ஓடு
அதற்குள்
எல்லாவற்றையும்
அள்ளியெடுத்து
இடுக்கிக் கொள்
முத்தமிடுகிறேன்
உனது
கனிவின் மீது
முத்தமிடுகிறேன்
உனது
ஏமாற்றத்தின் மீது
முத்தமிடுகிரறேன்
உனது
பரிதவிப்பின் மீது
முத்தமிடுகிறேன்
உனது
கண்ணீரின் மீது
முத்தமிடுக்கிறேன்
உனது
தோல்வியின் மீது

பயணம்


கைப்பற்றிவிடும்
காதலல்ல
நீ
அடைவதற்கு

இன்னுமொரு
மலையை
தன்னந்தனியாக
நெருங்கியாக
வேண்டும்
சிறு
குருவியையாவது
துரத்த முற்பட வேண்டும்
பயணம்
என்பது
அவ்வளவு
எளிதா

வா


வா
மனமுவந்து
என்னோடு
வா
சிறு
புல்
அசைய
நுனியில்
மிதந்தோடும்
ஆட்டம்
வா
தவளையாக
மாறலாம்
ஒவ்வொரு
உயிரிலும்
ஒவ்வொரு
உலகம்
காண்
வா
தூற
வா

வா


வரவேற்ப்புகளுக்கான
அத்தனை உபகரணங்களையும்
தயார் செய்திருக்கிறேன்
உனது படை சூழ
எனது படுக்கையறைக்குள்
நுழையலாம்
எல்லா வடிவத்திலும்
ஆட்கொள்ளலாம்
மரணத்தின்
கடைசி ருசியும்
தேக்கத்திலிருந்து
கரைந்து விட்டது
உதிர்ந்த இலைகளனைத்தும்
உயிர் பெறுமென் கிறாய்
கன்னத்தில் குழி விழுக
வா
எல்லா
ரூபத்திலும்
புன்னகையோடு காத்திருக்கிறேன்
ஒரு
பைத்தியத்தைப் போலவோ
அல்லது
கடவுளைப் போலவோ

ஊமைத் துயரங்கள்


விரித்த வண்டுகளின்
இறகுத்தூசிகள்
பட படக்க அசைகின்றது
சிக்கிய உயரத்திற்குள்ளிருந்து
எழும்பும் ஊமைத் துயரங்கள்
வாழ்வை உரசுகிறது
மொழித்தேர்செல்ல
வன்முறைகள்
நிசப்தத்திற்குள்
நிகழ்கின்றது
இறுதியாகிவிட்டது
இருள் மரம்
அழைக்கிறது
இனி
எப்பொழுதும்
திரும்பாத சைகையின்
பெரும் அழைப்பு
அது
பசித்த நிசியின்
குகை
மிகப் பெரும்
கருவறை
பதற்றத்தில் அனிலென
விழும்
சொற்களின்
உடலெங்கும்
வலிகளின் அகலங்கள்
இயன்றவரை அசைக்க
தரைதொட்ட பழங்களில்
சுவைப்பது
சுட்ட பழமா
சுடாத பழமா

வருந்தாதே செல்லமே


நாளைக்கான
உடைகளை
தயார் செய்வதைப்போல
நாளைக்கான
நட்புகளை
தயார்செய்யவேண்டியிருக்கிறது
நாளைக்கான
நிறங்களை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
கொண்டாட்டங்களை
தயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
விருதுகளை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
நடிப்புகளை
தாயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
புகழ்களை
தேர்வு செய்வதைப் போல
நாளைக்கான
சண்டைகளை
தாயார் செய்ய வேண்டியிருக்கிறது
நாளைக்கான
மரணத்தை தேர்வு செய்வதைப்போல
நாளைக்கான
காலத்தை
உருவாக்க வேண்டியிருக்கிறது
எல்லா ஏற்பாடுகளும்
நினைத்தபடி
நடந்து கொண்டிருக்க
வருந்தாதே
என் செல்லமே
நீ
நீடூழி வாழ்வாய்
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
கனிவைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
இறக்கத்தைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
மென்மையானவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
சோகத்தைத் தருபவை
ஆடுகளின்
குரல்கள்
எப்பொழுதும்
நறுக்கப்படுபவை

அரிதாரங்கள்


பசிக்கு மட்டுமே
மேயும்
கோழி
கிழக்கு
மேற்கு
பார்ப்பதில்லை
கவிதைக்கு
மட்டுமென்ன
கணக்கு
அரிதாரங்களை
பூசுவதற்கு தானே
ஆட்களைத் தேட வேண்டும்
அய்யய்யோ
கோவிச்சுக்க வேண்டாம்
தொடரட்டுமையா
தங்களின்
கோசம்
அலைக்கலிக்கும்
சொற்களுக்குள்
தடுமாறுகிறதென்
மீன்

நகர்வலம்


கையுறைக்குள் உலவும் கரங்கள்
கடவுளின் கரங்களேயில்லை
கையுறைக்குள் உலவும் கரங்கள் கருணைகளின் கரங்களேயில்லை
கையுறைகளின் மறைவுகளுக்கிடையில்
சூத்திரங்களின் கண்கள் விழித்துக்கொண்டேயிருக்கிறது
கையுறைகளுடன் காத்திருக்கும் ஏதாவதொரு கைகள்
மூன்று சக்கர வண்டியை தள்ளிக்கொண்டேயிருக்கிறது
மூன்று சக்கர வண்டியில் பொருத்தப் பட்டிருக்கும்
இசைக் குரல்கள்
வழக்கம் போல
கண்ணீர் வரிகளை சொட்டிக் கொண்டேயிருக்கிறது
மேலும்
வழக்கம் போல
விரக்திகளின் சுருதிகளை கலைந்துவிடாமல்
கண்காணித்துக் கொள்கிறது
யாராவது ஒருவரின் கெஞ்சலுக்குமிடையில்
யாராவதொரு வரின்
புகழ்களுக்கிடையில்
யாராவது ஒருவரின்
சுகங்களுக்கிடையில்
ஏதாவது ஒரு
கையுறையுடனான கரங்களின்
உந்துதலுடன்
மூன்று சக்கர வண்டி நகர்ந்து கொண்டேயிருக்கிறது

அலைந்து கொண்டிருக்கும் கடவுள



 ்அட பைத்தியகாரா
இரவுக்குள் ஒரு வார்த்தை
பகலுக்குள் ம்று வார்த்தை
என்று மாறத்தெரியாத மடையா

இந்த வியாபார உலகத்தில்
கவித கழுதன்னு கண்டதெயெல்லாம் பெனாத்தீட்டுகெடக்கெறயே
வெளங்கா
நாய்களா.
த்தூ ,.
கண்ணாடிக்காரர் தோட்டத்து பக்கத்தில்
காரித்துப்பிச்சென்ற
கிழட்டுக் கடவுளிடம்
கண்ணீர் வழிய கேட்டேன்
எப்பொழுது
எங்களுக்கு பிழைக்க வழிகிடைக்கும்
இனி வாய்ப்புகளேயில்லை
என்னையும் சேர்த்துத்தான்
சொல்லிச் செல்கிறேன்
அதனாலதான்
கடவுளாக அலைந்தபடியிருக்கிறேன்
என்றார் கடவுள்

காதல் மணக்கும் கவிதைகள்


சீக்கிரம்
வேண்டுமென்றாய்
ம்
மனதின்
ஆழத்தில்
இறங்குவதற்கு
படிக்கட்டுகளின்
எண்ணிக்கையை
தவறாகவும் கூட
குறித்துக்கொள்வதறிது
இன்னும்
கூட
வாழ்ந்து பார்க்க வேண்டும்
காலம்
முக்கியம்
மரணத்தைப் போல
வாழ்வும்
அத்தனை
அவசியம்

காதல் மணக்கும் கவிதைகள்


விரல்களுக்குள்
ஆயிரமாயிரம்
உணர்வுகள்
.
அது
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு
பூவை
உயிர்த்துக் கொள்கிறது

ஒவ்வொரு
பூ விற்கு
ஒவ்வொரு
குணம்
ஒவ்வொரு தீண்டலுக்கும்
ஒவ்வொரு வானம்
அவதாரம்
என்பது
கவிக்கு
சாத்யமே
கடவுளே

காதல் மணக்கும் கவிதைகள்


வெறும் வார்த்தைகள்
எப்படி
சபையேறும்
ஆடை உரசும் நெருக்கத்தில்
மனம் அந்தரத்தில்
ஊசலாடுகிறது
இத் தருணத்திற்குத்தான்
எத்தனை
எத்தனை
உளறல் மொழிகள்
இறகுகள் சூடிக்கொள்கிறது
புரிந்து கொள்ள முடிகிறது
காற்றுக்குள் மட்டுமே
கரைந்து போவதில்
அவ்வளவு சுகம்

காதல் மணக்கும் கவிதைகள்


கலைஞன்
பட
நாயகன்
ஆடிக்கொண்டுதானிருப்பான்

காலம் முழுதும்
இப்படி
ஜால்ரா போட்டே
வகை வகையாய்
ஓட்டியாச்சே
குமாரா.......
இன்னம்
எத்தினி நாளுக்கு
இந்த
பழைய
டமாரமெல்லாம்
படிச்சதீவே
படி
புடிச்சதீவே
புடி
யாருக்கென்ன
பிரியத்தில்
முத்தமிட்டு
கலைஞனின்
காதலி
ஆடிக்கொண்டேதானிருப்பாள்

காதல் மணக்கும் கவிதைகள்


வயதென்னும்
பொருட்டில்லை காதலில்
உன்வயதைக் கொண்டு
என் காதலையல்லவா
பரிசீலித்தாய்
நீ
பார்க்க
ஆறாய் ஓடுகிறேன்
நரை வயதை வைத்துக்கொண்டு
இத் தடத்திடல்
........................
என்செய்வாய்
நிறத்தோனே
தோல்வியென்று
எதுவுமில்லை
இளமைக்குத் தெரியும்
ஒரு வேளை
என் பிரியத்தில்
தடுமாற்றமிருந்திருந்தால்
கூட்டத்தோடு அலலவா
கொன்றிருப்பாய்
எக்காளமிடும்
வயதிற்கும் புகழுக்கும்
சம்பந்தமில்லாத
காதலை
உள்ளங்கையில் வைத்தல்லவா
விளையாட்டாக்கினாய்
அன்பே
வெற்றி எனபது
காதலில்
ஆயினும்
வெறுப்பில்லை
உன் நடத்தையில்
வயதும்
கூட அழகு தான்
தரைக்கு வந்துவிட்டேன்
நிறத்தோனே
தாராளமாக
பூக்களோடு வரலாம்
இத் தடத்தில்

காதல் மணக்கும் கவிதைகள்


ஏற்பாடுகளாகிவிட்டதா
குறிப்பிட்டபடி
திட்டங்கள்
நடைபெறுகிறதா
எல்லாம்
நினைத்தபடி
நடந்து கொண்டிருப்பதானால்
காதலென்கிற வார்த்தையால்
கொலையாட்டங்கள்
நிறைவடையட்டும்

காதல் மணக்கும் கவிதைகள்


காதல்களுக்கல்ல
அழகுகள்
அது
வெத்துப் பொல்லைகள்
ஈர்ப்புகள்
அற்ப காட்சிகளுக்கு மட்டுமே
காதல் குறிகளற்றது

காதல் மணக்கும் கவிதைகள்


அலைப்புகள் புதைந்திருக்குமிடம்
மவ்னத்தின் உள்.அறை
அல்லது
பகட்டுகளின் நிழலிடம்
ஓராயிரம்
சொற்களுக்கிடையில்
பவனி வரும்
ரகசியங்களின்
நுனிப்பிடி
திசையேதோவொன்றில்

காதல் மணக்கும் கவிதைகள்





அடையாளங்கள்
புழுத்துப் போகட்டும்
பறந்து செல்லும் வழி
காதலாகா அந்தரத்தில்
இறுக்கிக்கொள்ளும்
அறைகளுக்குள்
கணக்குகளின் ஆட்சி
நாட்காட்டியின் சதுரங்களில்
உரசும் உடல்கள்
பேராசைகளை கக்குகிறது
காமத்தின் புழுக்கைகள்
அகற்றப்பட்ட கணத்திற்குள்ளிருந்து
புனிதையர்களின்
வருகைகள்
பதிவாகி உயிர்க்கிறது
மாதிரிகள் அமோகமாகி
வழியும் நாட்களுக்குள்
நீயும் நானுமாகி
அவளும் அவனுமாகி
நுழையத் துவங்குகிறோம்
இரவுகள்
எப்பொழுதும் போல்
இறுதிக் கட்டத்தை
முடித்துக்கொள்ளப் போகிறது
கவிதை



விலாசத்தைக் கண்டடைய
வனாந்தரத்தில்,
சாலையில்
இருளில்
பகலில்
நாட்களில்
நொடிகளில்
திசைகளில்
கணக்கிற்குள் வராத
இணடு இடுக்ககளில்
காலங்களில்
நிறத்தில்
ஆயுதத்தில்
ஆணில்
பெண்ணில்
திரு நங்கையில்
குழந்தையில்
காப்பியங்களில்
இதிகாசங்களில்
வியர்வையில்
நீர்
நிலம்
ஆகாயம்
நெருப்பு
புகை
பூ
இன்னபிற அனைத்திலும்
கண்டடையலாம்
துாரத்து நிகழ்வு



பாரம் தாங்காத நிலத்தில்
இருப்பும், தீனியும் தடைபடுதா
அங்காலாய்ப்புகளுக்குள்
உட்கார்ந்து
ஆசையைக்கு மட்டுமே
வார்த்துக்கொள்ளும்
புகழின் குழந்தைக்கு
பசிக்காது நிரப்பிக் கொண்டிரு
தத்துவங்கள்
செரிமாணத்துக்கல்ல
மணடியிட்டு
நிரப்பிக் கொள்ளும்
இடத்திற்கு அல்ல கவிதை
அவ்வுயிர்
நிஜ ஊற்றின் ஆதாரங்கள்
இம் மலையிலிருந்தே
வழிகிறது
வுன் கண்கள்
மலைக்குவொரு
செடி கொடி போல துாரத்து நிகழ்வு
நிலத்தின் ஈரத்தில் படியும்
நிழல்களில்
யாமாகவே நிறைகிறது கவிதை