Monday, December 30, 2013

நிகழ் வழிச் சாரல்கள்



     

         நிகழ் வழிச் சாரல்கள்


-(புதிய மாதவியின் “சூரியப் பயணம்“ கவிதை தொகுப்பின் வழியே)         -    

-பொன்இளவேனில்

இது பனிக் குளிரில் நனையும் மாதம். கோதையை நினைகாமல் இருந்தால் இலக்கியத்தில் கூட விமோசனம் இல்லை. கோதையின் பாசுரத்தில் நாமும் கொஞ்சம் நனைந்தால் என்ன. .


 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர் மார்ப ! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் ! நீ  உன் மணாளனை
     எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
     த்த்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்,                        (19)


சயன அறையில் குத்து விளக்கு ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது. யானைத் தந்தத்தால் ஆன அழகிய வேலைப் பாடமைந்த கட்டில், அதன் மேல் அன்னத்தின் தூவி, மயில் பீலி, இலவம் பஞ்சு, செம் பஞ்சு  ஆகியன நிரப்பப் பெற்ற அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், வெண்மை, ஆகிய அய்ந்து உணர்வுகள் தாங்கிய மெத்தை விரிக்கப் பட்டுள்ளது. அந்த பஞ்ச சயனப் படுக்கையின் மேல் ஏறி. கொத்துக் கொத்தாக மலர்கள் சூடிய கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின். கொங்கைகளை மேலே வைத்துக் கொண்டுக் கிடக்கின்ற மலர் மார்புடைய கண்ண பெருமானே! உன் திருவாய் மலர்ந்து அருள்வாயாக! மை தீட்டப் பெற்ற கண்களையுடைய நப்பின்னைப் பிராட்டியே! நீ உன் மணவாளனை  சிறிது நேரம் கூட துயில் எழு விடமாட்டாய் போலும்! நொடிப் பொழுதும் கூட அவனை விட்டு நீங்கியிருக்க மாட்டாய் போலும்! இச் செயல் உன் நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தம் உடைய தாக இல்லையே!     

மார்கழி உற்சவத்தில் கரைந்து போவதும் கூட ஒருவித அர்பணித்தல் தான்.

இன்றைய இயந்திரத்தனமான சூழல்களில் தனியார் வகை நிறுவனங்கள் கூட தங்கள் நிர்வாக ஊழியர்களுக்கு  தியான வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் தருணம். . இது மனிதர்களின் மீதுள்ள அக்கரையா? அல்லது இன்னும் கூடுமானவரை சிதறிக் கிடக்கும் தனி மனித சிந்தனைகளை ஒன்றாக்கி அவர்களின் கூடுதலான உழைப்புத் திறனை பெருக்கிக் கொள்ளக் கூடிய ஆயத்தமா? எதுவானாலும், தொடர்நது கொண்டிருக்கும் சூழலில் சக்கரை நோயாலும் , இரத்த அழுத்த்த்தாலும் அதிக சதவிகித மனிதர்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் வேளை இது. அதாவது கோபத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடிய அத்தனை வைத்தியமாகவும் இம் மாதிரியான பயிற்சிகள் உதவட்டும்.


இப்போதைய மனிதர்கள் நாகரிகமாக கருதுவது, “வாழ்க்கையை அனுபவித்தல்,“ அதாவது சக மனிதர்களின் அவசரங்களானாலும்  ஆபத்துகளானாலும் .தவிர்த்து தமது வருத்திக் கொள்ளாத தப்பித்து தமது வாழ்க்கையை கேளிக்கைகளால் அனு அனுவாக ரசித்து, அதில் சொட்ட சொட்ட ருசித்து, ஒரு நாளின் முழு கணங்களையும், கூடுமான வரை தமதாக்கிக் கொள்ளும். நிலமை தான் இப்போதைய நாகரிக சூழல். முடிந்த வரை சிரித்து வாழலாம் துயர நிலை வந்தால் புழுங்கிக் கொள்ளலாம். நோயாகிலும் கூட மறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சகமனிதர்களுடனான இடைவெளி கேவலமானதாக கூட வருந்தும் நிலை. இந்த நிலையில் கோப ரசத்திற்கான இடம் யென்பது. இந்த சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது. கோபம் என்கிற உணர்ச்சியை குற்றவாளிக் குண்டான உணர்ச்சியாக ஒப்பிட்டுக் கொள்ளும் சமூகம் தான் இன்றைய சமூகம். இப்படியான நடை முறையை இதை வலியுறுத்திகிற மேல்தட்டு வர்க்கத்தின் சாயல்களாகவும் அரசு இயந்திரத்தின் சாயல்களாகவும் கூடவழியுறுத்தப் படுகிறது. இந்த நிலமையில் தான் சக மனிதர்களின் மீதான ஆதிக்கங்களும், அனுசரித்துச் செல்லக்கூடிய கீழ் நிலை மனிதர்களாகவும். வேறுபடுகின்றனர்.


சொல்லப் போனால் கோப உணர்ச்சிகள் மறைக்கப் படவேண்டியதாக நிரபந்தங்களை ஏதாவது ஒரு வடிவத்தில் இந்த சமூகம் நிர்பந்தப் படுத்துகிறது. கோப உணர்ச்சி என்பது இயற்கையான தா? செயற்கையானதா? என்கிற சந்தேகம் வலுப் பெற்றால். தன்மானம், சுய கௌரவம் என்பதற்கான இடம் எங்கே? தேடிப் பார்க்கவேண்டியதாய் தான் உள்ளது. கோப உணர்ச்சிகள் நோய்மையாக கருதும் நிலையில். கோபமே வராத, வரக் கூடாத  உணர்சிகளை என்னவென்பது? அதையும் நோய்மையின் வகையில் சேர்த்துத் தானாக வேண்டும்.. கோபமே இல்லாத இடத்தில் வேறு  என்ன! ஒப்பனையால் கொஞ்சுவதும். வெட்க்க்கேடாய் குலைவதும் தான் குல தொழிலாக்க வேண்டிவரும்.  இதில் யார் சமார்த்திய சாலிகள் எனபதில் தான் அடுத்தகட்ட போட்டிகள். தொடர்ந்து கொண்டிருக்கும்.     


புதிய மாதவி அவர்களின் கோபா ரசத்திற்கான கவிதைகளைக் கொண்ட சூரியப் பயணத்திற்குக் கொஞ்சம் வருவோம்..     
கவிஞர் புதிய மாதவியின் 1999-ஆம் வருடம் வெளியான முதல்கவிதைத் தொகுப்பு சூரியப் பயணம். இதற்குப் பிறகு கிட்டத் தட்ட கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் என பதினொரு தொகுப்புகளுக்கு மேல் வெளி வந்திருக்கின்றன.. இவருடைய படைப்புகள் தமிழ் இலக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் பலர் பல இடங்களில் குறிப்பிடக் கூடிய பதிவு செய்திருக்கக் கூடிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
இவருடைய படைப்புகளில் பெண்ணியக் கருத்துக்களை அவர்களுடைய வாழ்வியல் சிக்கல்கள் குறித்து விரிவாக பேச முயல்வதாகவும், உணர்த்த முயல்வதாகவும். கொண்டிருக்கிறது.
 
                மதியைத் தொட்ட நேரம்
                   மயக்கம் பிறந்த்து ஏனோ?
                 மயங்க வைத்த விதியே
                   மரணம் பிழைத்தது. ஏனோ?“   (பக்கம்-76)


பெண்களின் வாழக்கைத் துயரங்களை கண்டு, பரிதவித்த உச்சமான வரிகளாக தொட்டதும், தொடாத்தும் என்கிற தலைப்பிட்ட கவிதையில் இவ்வரிகள் பதிவாகியிருக்கின்றன். மேலும் இவ்வாறான உணர்ச்சி பொங்கும் வரிகள். இந்த தொகுப்பு முழுதும் நிறைந்திருக்கின்றன.      இந்த்ச் சூரியப் பயணம் என்கிற கவிதைத் தொகுப்பு இதையே முன் வைக்கின்றன. இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள் ஆரம்ப காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக கோபா உணர்சிகளின் தடயங்கள் பெருகிக் கிடக்க்க்கூடிய கவிதைகளாக தெறித்துக் கிடப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. களம் கண்ட கவிதைகளாக அரங்கக் கவிதைகளும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கின்றன.  சுயத்தை பற்றிப் பேச முற்படாமல், சமூகத்தின் பாதிப்புகளையே இந்தத் தொகுப்பு முன்வைத்திருப்பது. இந்த சமூகத்தின் மேல் இவருக்குடைய அதிகப் படியான அக்கறைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. மும்பை தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமான அடையாளங்களில் புதிய மாதவியும் ஒருவராக இவருடைய படைப்புகள் வழி அறிந்து கொள்ள முடிகிறது.     

இந்த சூரியப் பயணம் தொகுப்பிற்கு நாஞ்சில் நாடன் அவரகளின் வாழ்த்துரையால் அலங்கரிக்கபட்ட தொகுப்பு என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.  பிரச்சார தொனிகளை அதிகம் கொண்டிருந்தாலும் அவர் கடந்து வந்திருக்கும் அனுபவம் தமிழ் சூழலில் குறிப்பிட்ட உயரத்தை என்பதையும் மறுக்க இயலாது. இவருடைய முதல் தொகுப்பை வாசிக்கும் எனக்கான அனுபவம் என்பது வளர்து நிறைந்து வந்து விட்ட கிணற்று நீரின் மேல் தளத்திலிருந்து. முதல் துளியை நோக்கி புறப்படும் ஒரு நீச்சல் காரனின் பயணம் போன்ற அனுபவத்தை இந்த சூரியப் பயணம் எனக்கு தந்திருக்கிறது.


கடந்த வாரம (சனி,டிசம்பர், 21- 13) தி,இந்து நாளிதழில் வெளி வந்திருந்த செய்தி  மிகவும் வருத்தமடையச் செய்தது.  சிறைக்குள் மடியும் கைதிகள் மரண தண்டனை விதிப்பது யாரோ?என்கிற தலைப்பில் ஆர்,சிவா, என்பவர் தொகுத்திருந்தார். அதன் விளக்கம் பின் வருமாறு. சிறைகளில் மரணம் அடைந்தவர்களின் பட்டியல் விவரம். (2000 -ல் 69,) (2001, 76,) (2002, 90), (2003, 107), (2004, 103), (2005, 102), (2006, 116), (2007, 78), (2008, 74), (2009, 65), (2010, 79), (2011, 64,) (20012, 62,). தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள், 3 பெண்கள் சிறைகள், இளம் குற்றவாளிகளுக்கான ஒரு சிறை, மற்றும், மாவட்ட சிறைகள் உள்பட, மொத்தம், 136 சிறைச் சாலைகள். இவற்றில், 22 ஆயிரம் கைதிகள் அடைக்க முடியும். தற்பொது 14ஆயிரம் கைதிகள் வரை உள்ளனர்.. சேலம் மத்திய சிறையில் 1995-ல் ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கர் தூக்கிலிடப் பட்டார். அதற்குப் பிறகு யாருக்கும் தூக்குத் தண்டனை நிறை வேற்றப் படவில்லை. ஆனால், தமிழக சிறைகளில், 4, நாளுக்கு ஒரு கைதி மரணமடைகிறார். தமிழக சிறைகளில் 2000-ம் ஆண்டு முதல், 2012-ம் ஆண்டுவரை, 1,095 பேர், மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நோய் ஏற்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப் படாமல் இறந்த தாகவே கூறப் படுகிறது. ஒரு சிலர் மட்டுமே போலீஸ் தாக்குவதால் காயம் ஏறப்பட்டு மரணம் அடைகின்றனர். இநத இரண்டுமே இயற்கையான மரணம் இல்லை என்பது மட்டும் உண்மை. ஒரு சிறையில், விசாரணைக் கைதிகள். தண்டனைக் கைதிகள். என இரண்டு பிரிவில் கைதிகள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் உத்தரவால் மட்டுமே அடைக்கப் பட்டவர்கள். ஆனால் அதற்குப் பிறகு, சட்டமும் நீதியும் சிறைகளில் கடைபிடிக்கப் படுவதில்லை. சிறைகளில் தினமும் காலை 6 மணிக்கு கைதிகளின் அறைக் கதவுகள் திறக்கப் படும்.   

அப் போது பட படக்க எல்லோரும் முண்டியடித்து ஓடுவார்கள். வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்கள் ஓடுவது கழிவரைக்குத் தான். 100 பேர், 200 பேர் ஓரே நேரத்தில் முற்றுகையிட்டாலும். அங்கு இருப்பது என்னவோ 6,அல்லது 7 கழிவறைகள் தான். ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர்களுக்கு பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில் அந்த கழிவறைகள் மிகவும் மோசமாகிவிடும். அதற்குப் பிறகு வரும் வரும் ஒவ்வொருவருக்கும் தொற்று நோய் உறுதி. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசவன் என்கிற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பதான தகவலும் அவரது பேட்டியும் அச் செய்தியில் பதிவாகியிருக்கிறது. 

எழுதாத கவிதை

என் சின்னக் குயிலே!
நல்ல காற்றுக்கும்
நாயாய் அலையும்
நரகர் காட்டில்,
உறக்கம் மறந்த
புழுக்க இரவில்
நீ ஏன் உதயமானாய்?

நீ பாடும் முன்பே
குரல்வளை பறித்த
பாவையின் வயிற்றில்
ஏன் பயணம் தொடங்கினாய்?

தாய் பார்க்காத முகமே...!-என்
தமிழ் படிக்காத மனமே...!
அச்சில் ஏறாத எழுத்தே-என்
எழுதாத கவிதை நீயே!              (பக்கம்-16)


என்கிற புதிய மாதவியின் கவிதை வரிகளை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. இம் மாதிரியான வெளிச்சத்திறகே வராத, வெளிப் பார்வைகளுக்குள் நுழையாத மனித வதைகளை உயிரிழப்புகளை பற்றியான உலகத்திற்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் ஏன் சமகால இலக்கிய வரையறைக்குள் வரவில்லை. இப்படி நடைமுறை வாழ்க்கை சூழலில். சர்வ சாதாரணமாகி விட்ட மனித உயிர்களின் இழப்புகள் மற்றும் அதன் சிதைவுகள். குறித்த மனப் போக்கு அன்றாட நிகழ்வுகளாகி விட்ட வெறும் செய்திகளாகவே வாங்கிக் கொள்வதும். பின் மறந்து விடுவதுமான இயல்பு நிலைகளில் ஒன்றாகவும்  ஆகியிருக்கிறது. அதி தீவிரமான கட்சி இயக்கங்கள், அதி தீவிரமான மத நம்பிக்கைகள், அதி தீவிரமான பேராசைகள், அதிதீவிரமான உறவுச் சிக்கல்கள், அதி தீவிரமான கட்டுப்பாடுகள் அதி தீவிரமான போதைகள். என தொடர்ந்து கொண்டிருக்கும், உயிர் இழப்புகளில் எண்ணிலடங்காத வகைகளாக பிளவு  கொண்டிருக்கிறது. மனித இனம். லாபகரமான உலக கேளிக்கைகளிலும், உலக விளையாட்டுகளிலும், ஊடகங்களும், அரசாங்கமும்  காட்டும் அக்கறை. ஏன்  உயிரிழப்புகளில் காட்டுவதில்லை. காடுகள், மேடுகள், புதர்களென. வனாந்தரங்களெல்லாம் சுற்றி விலங்குகளை கணக்கெடுக்கும் துள்ளியமும் கூட சிறை வாழ்க்கை மனிதர்கள் அவர்களின் உயிரிழப்புகள் பற்றி கவலை கொள்ளாதிருப்பது. அதிர்ச்சிக் குள்ளாக்குவதாகவே யிருக்கிறது. 


நிகழ்கால செயல்பாட்டாளர்களின் சாதனையாளர்களின். இருத்தல்கள் தம்மை மட்டுமே முன்னிருத்திக் கொள்ளக் கூடிய அறபத்தனங்களைக் கொண்டிருக்கிறது. தாம் முன்னெடுத்துச் செல்லக் கூடிய இளைய தலைமுறை களை பொது நோக்கோடு அனுகுகிற பாங்கு என்பது தற்போதைய இலக்கியச் சூழலில் மலிந்து போய்விட்டது. தம்மை சுற்றியுள்ள வட்டங்களை துதிபாடுகிற சபைகளாக முன்னிருத்திக்கொள்ள எத்தனிக்கிறது. இதில் பொது நோக்கோடு அனுகுகிற கலைமனம். பின்தள்ளப் படுகிறதை அறியாதவர்கள் இல்லை. சந்தை மயமாகி விட்ட இலக்கிச் சூழலிலும் அவரவர்களுக்கான நிலையை தமது சுயத்திற் கேற்ப்ப அமைத்துக்கொள்கிறது. அதற்க்கான வியுகமாக தன்னந் தனியான பல விதமான வர்ண அடையாங்களை மறைமுமாக்கி சாணக்கியத் தனங்களால் தகர்த்து விடக் கூடிய தேர்ந்த வித்தைகளை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது. என்பதை சற்று ஆழ்ந்த பயணத்தின் அனுபவங்களால் மட்டுமே உணர்நதுகொள்ள முடிகிறது. உழைப்பிற்கு துளியளவும் செவிமடுக்காத இதயங்கள். பழி வியுகங்களால் அல்லது நிராகரிப்புகளால். உதறுகின்ற, காணாது கண்டு போகும் சூத்திரங்களை பாங்காக கையாளவும் தயங்குவதில்லை..    நகுலனின் தீட்சண்யமான வரிகள் இந்த இடத்தில் ஞாபகத்திற்கு வருகிறது.


உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
இருப்பதற்கென்று தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

கவிதைகளில்  துயரஙகள் மிஞ்சியிருக்கக் கூடாது. கசப்புகள் மிஞ்சியிருக்கக் கூடாது. சுய கழிவிறக்கம் மிஞ்சியிருக்கக் கூடாது  என, ஆளுக் கொரு பாதகைகளைத் தாங்கிக் கொண்டு வரிசைகளில் நிற்க்கும் இலக்கிய ஆய்வு மேதமை (பயங்கரம்) படாடாபிகளுக்கிடையில். அனுபங்களின் வரிகளெல்லாம வெளிச்சமாக சிந்திக் கொணடு போகும் சுகங்களில் கவிதைகளின் முச்சு. கலங்க மற்று சுற்றுகிற காற்றாகிறது. 


கோபத்திற்கும் ஞானத்திற்கும் இடையில்  ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அனுபவ முக்தியின் வடிவங்கள் தான் பயணிகள். அதிகாரங்களின் கண்ணீர்களுக்கும். அடிமைகளின் அதிகாரத்திற்கும். இடையில் ஓடிக் கொண்டிருக்கும் ஓரங்க நாடகங்களின் காட்சியில். நிதர்சனங்களெல்லாம் வெறும் பார்வையாளராக, தொலை தூர இருக்கைகளில் அமர்ந்து. ஆடாத ஆட்டங்களையும் காணாத வேசங்களையும் காணவேண்டிய கட்டாயங்களில் கிடக்கிறது


“யாருமே இல்லாத உலகில்
என்ன தான்
நடந்து கொண்டிருக்கிறது இங்கு“


இந்த ஞானக் கசப்புகளின் தீராத ஆட்டங்கள் தான்.  நகுலனின வரிகளில் முன் நிற்கிறது..

        (37-வது கோவை இலக்கியச் சந்திப்பில் வாசிக்கப் பட்ட கட்டுரை)
             






Sunday, December 22, 2013

இலக்கியப் பயணக் குறிப்பு

 இலக்கியப் பயணக் குறிப்பு

(பொள்ளாச்சி இலக்கிய வட்டம் -8)                                   -                                                    -  பொன்இளவேனில்

 என்றென்றும் நினைவுகளுக்குள் மிதக்கும் மலை முகடுகள் கண்ணுக்கெட்டும் வரை பசுமைகளால் நிரம்பி வழியும் மலைச் சரிவுகள், மரங்கள் ,செடி ,கொடிகள், காடுகள், தோட்டங்கள் என சூரியன் தவழும் மஞ்சள் பசுமைகளோடு குளித்து நெகிழும் பூமியில், ஒரு நாள் முழுவதும் சரணடைவதென்பது  ஆன்மாவை சுத்தப்படுத்துகிற காரியம்.  முந்தய நாளே பொள்ளாச்சி பயணத்திற்க்கான தயாரிப்பில் மனம் குதூகலம பெற்றிருந்தது. அக் கணம் முதல் அந்த மண்ணின் மணம் எனது இருப்பெங்கும் படரத் துவங்கியிருப்பதை உணர்ந்திருந்தேன்.
நீண்ட கால தோழமைகளின் நேசங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்திருப்பது இதமான தருணங்கள். பொள்ளாச்சிக்கும் கோவைக்குமான இலக்கிய நெருக்கமும். பொள்ளாச்சிக்கும் இருகூருக்குமான இலக்கிய நெருக்கமும்  சொல்லிற்குள் அடங்காதது.

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் புறப்படத் தயாரானேன். விடுமுறை நாளில் கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்க மனம் ஆர்ப்பரித்தாலும். சலனங்களுக்கு இடம் தராமல் எழுந்து கொண்டேன். துர்க்கம் எப்பொழுதுமே நான் விரும்பும் ஆசான். எந்த தோல்விகளையும் முறியடித்து விடக் கூடிய பயிற்சியை தூக்கமே எனக்களித்திருக்கிறதாகவே உணர்ந்திருக்கிறேன். சுற்றிலும் உள்ள விசுவாசிகள் தேவாலயம் நோக்கிச் செல்லும் உற்சாகத்தைப் போல புறப்படத் தொடங்கி விட்டதும். அலை பேசியில் அழுத்திய முதல் எண் நண்பர் யாழியினுடையது. அவர் கிளம்பி விட்டதாகவும் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு ஒத்தக் கால் மண்டபத்தில் காத்திருப்பதாகவும் கூறினார்.

அடுத்த அழைப்பில் இளஞ்சேரல் தயாராக, அவர் வீட்டிற்குச் சென்றேன். அவரது இளைய மகன் கார்த்தி சுறு சுறுப்பாக விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவரும் அவர் மனைவியும் சாப்பிட வற்புறுத்தினார்கள். முதலில் பயணத்தைத் துவங்குவதில் தான் ஆர்வமாக இருந்தேன்.  அந்த வேலை முடிந்து விட்டதாக கூறி ஒருவழியாக சமாளித்துவிட்டு இளஞ்சேரலை ஏற்றிக் கொண்டு பைக்கின் மென்னியைத் திருகி கிக்கரை உதைத்தேன். அது அலறி உயிர் பெற பைபாஸ் சாலையை நோக்கி இருவரும் புறப்பட்டோம்.
சூரியன் ஓய்விலிருந்தான். வெண்சாம்பல் நிற ஆடைகளை இந்த வெளி பொருத்தியிருந்தது. பனி புகை உயரப் பறந்து தமது கூடாரத்தை விரிவுபடுத்தியிருந்த்து.  வேகத்திற்குத் தக்க படி எங்களுக்கு வழிவிட்டு விலகி நகர்வதைப் போல உணர்ந்தோம். மழையின் ஞாபகம் அடிகொரு தரம் நினைவுகளில் வந்து போனது. காரணம். வங்க்க் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதால் தென் தமிழகத்தில் மழைவர வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்சி நிலைய அலுவலர்  ரமணன் கூறியதை தொலைக்காட்சியில் கண்டிருந்தேன்.

காற்று மெலிதான ஈரத்தை தடவிக் கொண்டிருந்தது. எவ்வித தங்கு தடங்கலுமின்றி பயணத்தை இலகுவாக்கித் தரும் பைபாஸ் சாலை பனிக் குவியல்களுக்குள் மின்னிக் கொண்டிருந்த்து. மனமெல்லாம் இலகுவான மகிழ்ச்சி எல்லா சுமைகளையும் புறந்தள்ளிவிட்ட பேருணர்வு. பொறுப்புகளிலிருந்து விடுதலையாவது, முதன் முதலாக பறக்கும் சின்னஞ் சிறிய குருவியின் பறத்தலைப்போல ஒரு விடுதலை.. எதிலிருந்து எதுவாகவோ ஒருவிடுதலை.
இளஞ்சேரலிடம் இலக்கியம் மற்றம் கோவை இலக்கியச் சந்திப்பு நிகழ்வின் சம்பந்தமாக கலந்து கொள்ள வேண்டிய தான பயணத்தை தொடர்ந்தோம். எதிர் காற்று குரல்களை அடித்துப் போகாதிருக்க குரலை உயர்த்திக் கொண்டிருந்தோம். கோவை ஞானி அவர்களுடனான அலைபேசியில் பேசிய இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டேன். 

தேங்கியிருக்கும் நிலைகளைக் குறித்த வேடிக்கைகளை பகிர்ந்தவாறு எங்கள் பயணம் நிகழ்நது கொண்டிருந்தது  இரு புற வழிகளெங்கும் தென்னந் தோப்புகளின் தொகுப்புகளையும். உயர்ந்து மமதைகளோடு காற்றில் லாவகமாக அசைந்து கொண்டிருக்கும் கீற்றுகளின் அழகும் ததும்பிக் கிடக்கும் வழியில். மிக எளிய தும்பிகளைப் போல கணங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தோம்.  நேற்றைய கண்ணாடியில் தெரிந்த மங்கிய தோற்றங்களை எங்கள் பகடிகளால் நாங்களே உரித்து வேகடித்து ரசித்து சிரித்துக் குலுங்கியபடி காற்றின் உக்கிரத்தில பறக்கவிட்டு சிரித்தோம். எல்லா இலக்கிய மாய சித்திகளையும் மார்கழிப் பனிக்காலைக்கு இரையாக்கி குதூகழித்தோம். எதிர் வந்த எந்த வாகனத்தையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவில்லை. வாகனத்தின் எக்ஸலேட்டர். எந்த கடுமைக்கும் ஆளாகாது எங்களது கிளர்சிக்கு மிக மென்மையாக இசைந்து கொடுத்துக் கொண்டிருந்த்து.

பொள்ளாச்சி சாலையை நெருங்கியதும் சிறு குழப்பம் வந்தது போன முறை முழுமையடையாதிருந்த பாதைகள் இப்பொழுது முற்றிலும் புதிய அலங்காரங்களை பெற்றிருந்த்தே குழப்பத்திற்கு காரணமாகவும் அமைந்தது.  இளஞ்சேரல் தெளிவு படுத்த பிரதான சாலையில் பயணிக்கத் தொடங்கினோம். யாழி காத்திருப்பதை ஞாபத்திற்குள் அடிகொருதரம் சரிபார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒத்தக்கால் மண்டபத்தின் .குறிப்பிட்ட இடத்தை அடையாளம் தெரியாமல் தாண்டிச் செல்ல, யாழி பின் வந்து சேர்ந்து கொண்டார். மூவரும் திருமுருகனின் ஆசி பொருந்திய ஒரு சைவ ஓட்டலில் அடைகலம் புகுந்தோம். அவசரத்திற்கும் சிக்கனத்திற்கும் பொருத்தமான வகையான இட்லிகளையும் ஆம்லெட்டுகளையும் அடுக்கிக் கொண்டோம். சோழநிலாவிற்கான அழைப்பைத் தொடுத்து எங்களின் வருகையை சொன்னேன்.

சோழநிலா போன வாரம் செல்லிடப்பேசியில் என்னிடம் தொடர்பு கொண்டிருந்தார்.  மகள் பிறந்த மகிழ்சியை பரிமாறிக்கொண்டார். “வேரில் விழுந்த துளிகள்“ எனும் தலைப்பில் 13 கவிஞர்களின் படைப்புகளைப் பெற்று 2002-ல் தொகுப்பாக்கியிருந்தார்.. அத்தொகுப்பு 2003-ஜனவரி 5-ல் பொள்ளாச்சியில் பள்ளிவளாகத்தில் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. அந்தத்தொகுப்பில் என்னுடைய கவிதையும் இடம்பெற்றிருந்தது. அந்த தொகுப்பை இரண்டாம் பதிப்பாக கொண்டு வரலாம் என்கிற திட்டத்தில் இருப்பதாகவும்.. மேலும் புதிய கவிஞர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற யோசனையும் இருக்கிறது. அது பற்றியான விசயங்களையும் கருத்துக்களையும் என்னிடம் பறிமாறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அழைத்திருந்தார். மிச்சிறப்பான முயற்சி தொடருங்கள் என்றேன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரது மகள் இசைப்பிரியாவை நலம் விசாரித்தேன்.
பொள்ளாச்சி வரும் தகவலைச் சொன்னதும் வாருங்கள் காத்திருக்கிறேன் என்றார். அவர் குரலில் மகிழ்சி குடிகொண்டிருந்தது.  .இடையில் யாழி. கைப்பையை பேருந்தில் தொலைத்திருந்த  வருத்தமான செய்தியை சொன்னார். அதில் சில புத்தகங்களும் உடைகளும் களவு போயிருந்த்தையும் கூறினார். மேலும் அதிர்ச்சியென்னவென்றால் தற்பொழுது பேசவிருக்கும் கவிஞர் பூர்ணாவின் கவிதைத்தொகுப்பும். நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டிருந்த கட்டுரையும் அதில் அடக்கம் என்றார். “நிகழ்சிக்கு என்ன பண்ண போகிறீர்கள் என்றேன் பேரதிர்சியாக.. நிகழ்விடத்தில் யாரிடமாவது தொகுப்பை வாங்கி எழுதிக் கொள்ளலாமென்றிருக்கிறேன் என்றார். ஓரளவு நிம்மதியோடு பயணத்தைத் தொடர்ந்தோம்.

யாழி திருச்சியிலிருந்து இன்று அதிகாலைதான் கோவைக்கு வந்திருந்த்தை அவரின் சோர்ந்த கண்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தன. எப்பொழுதும் சுற்றிக் கொண்டேயிருக்கும் இயல்பும். மிக்வும் எளிமையான பேச்சும் தான் . அவரிடம்  கவர்ந்த விசயம். கடந்த வாரங்களில் யாழியை சந்திக்க இயலவில்லை அதிக பட்சமாக மூன்றுநாட்களுக்குள் நேரிலோ அலைபேசியிலோ வந்துவிடுவார். எந்த தகவலும் இல்லாத்தால் இரண்டு நாட்களுக்கு முன் தான் யாழியுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். வீடு மாற்றல் வேலை நடந்து கொடிருப்பதாகவும்.சூலுர்ர் வாசியாகியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் திருச்சி திருமணவிழாவிற்கு செல்லவிருப்பதையும் நண்பர்களை சந்திப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் சந்திக்கலாம் எனவும் முன்பே குறிப்பிட்டிருந்தார்.

இப்பொழுது இரண்டு வாகனங்களும் நாங்கள் மூவருமாக பயணத்தில் குதூகலித்திருந்தோம். வெய்யில் ஆட்சி கொள்ளத் துவங்கியிருந்தது. முன்னால் வியாப்பித்திருந்த சாமபலின் வர்ணங்கள் எங்கு மாயமாகிப் போனதுவோ யாரறிவார்? பச்சை இலைகள் மகிழ்சியாகியிருந்தன கீழான பாதையிலிருந்து உயரமான மலை பிரதேசங்கள் வரையிலும் பச்சை நிறங்கள் நிரம்பி வழிகின்றன. இரண்டு மூன்று விசாரிப்புகளின் வழியே ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் நிகழ்விடத்தை  அடைந்தோம் முகப்புத் தோரணையில் வரவேற்ற பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பதாகையில் மீசைக் கவி விழிகளால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி இ.ரா.பூபாலன் வரவேற்றார். அவர் முகத்தில் கொஞ்சம் பரபரப்பு இலையோடியிருந்த்தை வெய்யிலில் மின்னிய அவரது மூக்கு கண்ணாடி மறைத்துக் கொண்டிருந்த்து. கூடவே அம்சபிரியாவின் பிரகாசமான புன்னகையும் எங்களை உள்ளே அழைத்துச் சென்றது. பைக்கில் தயாராய் அமர்ந்திருந்த மழைக்காதலன் .குறும்புப் பார்வையோடு கைகுலுக்கினார். (சம்பத் என்கிற மென்மையான இளைஞனை விட மழைக்காதலன் என்கிற குறும்புக்கார எழுத்தாளனே எனை வசீகரித்தவன்) ‘’வாங்க அய்யா, வாங்க, சிற்றுறை பேருரை எல்லாம் ஆற்றுங்க அதற்குள் வந்து விடுகிறேன்’’.என்று அவசரமாக (இல்லை) குறும்பாக கிளம்பினார்.  (அவரின் முதுகில் படுத்திருக்கும் தோள் பை. அனுமன் கைகளில் சுமந்துவரும் சஞ்சீவி மலையை, மழைக்காதலன் தமது தோளில் சுமப்பது போல் தோன்றியது. மேலும் மந்திரவாதியின் ரகசியத்தைப் போல அந்த கறுப்பு பையை சுமப்பது போலவும் என் விபரீத சிந்தனை ஓட்டமெடுத்தது).

யாழி யிடம் திரும்பினேன். என்ன செய்தீர்கள் என்றேன். பூபாலன் தொகுப்பை எடுத்துவர போயிருக்கிறார். என்றார்.. சோ. ரவீந்திரன் கையைக் குலுக்கினார். மகிழ்வைப் பரிமாறிக் கொண்டு அவரது இடது கையில் வைத்திருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். யார் கையில் புத்தகத்தை வைத்திருந்தாலும். புத்தகத்தை அல்லது புத்தகத்தின் தலைப்பையாவது பார்த்துவிடவேண்டும் என்பது எனது (வியாதி அல்லது) ஆர்வக் கோளாறுகளில் ஒன்று. ஜெயமோகன் மொழிபெயர்த்த மழையாளக் கவிஞர்களின் கவிதைகள் கொண்ட தொகுப்பு. அட்டையைப் பார்த்த திருப்தியில் அவரிடமே கொடுத்துவிட்டேன். அவர் கோவை புத்தக கண்காட்சியில் வாங்கியவைகளிலொன்று என்றார். பின்பு இளஞ்சேரலிடம் அவர் கவனம் போனதும். யாழியைத் தேடினேன். அவர் கொஞசம் தொலைவில். பள்ளிக் கூட கட்டிடத்தின் முன்பான படிகட்டில் அமர்ந்து தமது புதிய கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காட்சி மனதை நெருடியது.. அவருக்கு தனிமை மிக மிக அவசியம்.என மனதில் பட்டது. 

பள்ளிக் கட்டிடத்தைப் பார்த்தேன். அது வெகு உயரமாக அடுக்குகளைக் கொண்டிருந்தது. கற்களால் எழுப்பப்பட்ட கட்டிடம் என சுவற்றுக்குள் புதைவடிவம் பெற்ற கற்களின் உருவம் நிரூபித்துக் கொண்டிருந்த்து. மரங்களால் சூழப்பட்ட ஒரு அமைதி அந்தக் கட்டிடத்திற்கு மேலும் உயிரூட்டியது. கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து ரசித்தேன். அது புட்டு மூஞ்சிக்  காரனின் கோபத்தைப் போல உம் என்றிருப்பதைப் போல விரைத்து நிற்கிற உயரம். இளஞ்சேரலிடம் கட்டிடத்தைக் கவனித்தாயா? என்றேன். ம்..... திரைப்படத்தில் பார்த்ததைப் போல இருக்கிறது. இது தான் சின்ன கோடம் பாக்கமாச்சே... என்றார். இந்தப் பெரிய கட்டிடத்திலிருந்து முப்பது அடி தூரத்தின் முன்னால் அமையப்பட்ட ஒரு 100 நபர் இருக்கமாக அமரக்கூடிய  அறையில் இலக்கிய நிகழ்வு நடக்கிறது.

அந்த அறைக்கு தடவி விடும் பெரிய ஆலமரத்தின் கிளைகள் அசைந்து கொண்டிருந்த்து.அதன் நிழலில் தான் நாங்கள் நனைந்து கொண்டிருந்தோம் .மேலும் அந்த ஆலமர நிழலில் நுழையாத ஆட்களென அங்கு யாருமே இருக்க முடியாது. என்பதை உறுதியிட்டுக் கூறலாம். அக்கட்டடத்தின் அருகில் போய் நின்றேன். அதன் உயரத்திற்கு நாங்கள் சின்னஞ்சிறிய பிராணிகளப் போல் அல்லவா இருக்கிறோம். என தோன்றியது. அதன் கிழக்குப் புற மைதானத்தில் வியாடுவதற்கான மைதானக் குறிப்புகளைப் பெற்றிருந்தது. சின்ன அளவளாவலுக்குப் பிறகு. ரவீந்திரனிடம் தம் இருக்கா? என கேட்டேன் அவர் எனக்கே வைத்திருப்பதைப் போல அவருக்கும் எனக்குமாக இரண்டு சிகெரெட்டுகளில் ஒன்றை பகிர்ந்தளித்தார். 

பெரிய ஆலமரத்தின் உடலில் சாய்ந்த படி புகைத்தோம.  நிகழ்வு ஆரம்பித்திருந்த்து. அரங்கத்திற்குள் சென்றோம். சோழ நிலா அமர்ந்திருந்தார். அவருடன் கைகுகுலுக்கிக் காண்டு. இருக்கையில் அமர்ந்தேன். வரறேபுரையை அம்சபிரியா தொடங்கினார். நிகழவில் யாழி பூர்ணாவின் கவிதைத் தொகுப்பு குறித்து பேசினார். பூர்ணாவின் ஏறபுரையில் கவிதை குறித்து பேசிய யாழியை பார்த்ததில்லை, யாழி அவர்களுக்கு நன்றி. இந்த இலக்கிய சந்திப்பிற்கு முன் வரை யாரும் எனக்கு அறிமுகமில்லை.என்றார்.  செங்காந்தள் இதழ் குறித்து பேசிய பூர்ணா நணபர்களின் உதவியோடு இந்த இதழை நடத்துகிறோம். சங்க இலக்கியத்தில் கபிலரின் குறிஞ்சி நிலப் பாடல்களில் மலர்களின் வகைகள் அதிகமாக உள்ளன அதன் பிண்ணனியில் வரும் மலர்களைப்பற்றிய ஆய்வுகளாக தொகுத்து ஒவ்வொரு இதழிலும் எழுதிக் கொண்டு வருகிறோம். இந்த வகையில் “செங்காந்தள்“ இதழின்.நோக்கமுமாகும் என்ற சிறிய ஏற்ப்புரைக்கு பின் கலந்து கொண்ட அனைவரின் அறிமுகமும்  நிகழ்ந்தது.

தம்பான் தோது“ சிறுகதைகள் குறித்து தமது வாசிப்பனுவத்தை பேசிய அம்சபிரியா அவர்களின் உரையில் அவரது இருபது முப்பது வருட அனுபவத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. நான் எதிர் பார்த்திருந்த்தற்கும் மேலாகவும்  சிறப்பாகவும் அமைந்த்து. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நாவல்களுக்குண்டான தளத்தைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் அதிக பக்கங்களைக் கொண்டிருக்கிறது. இளஞ்சேரல் இல்லாமல் வேரொருவராக இருந்தால் இந்த ஒரு தொகுப்பையே பத்துத்தொகுப்பாக்கி விற்பனையில் வைத்திருப்பார்கள். என்றார். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளும் அதிக விசயங்களால் நெருக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். .மேலும் கதைகள் குறித்து விரிவான பாதிப்பை முன்வைத்தார்.

நான் நிலையிலிருந்து விலக முற்பட்டு அரங்கத்தின் வெளியே வந்தேன். கவிதை வாசிப்பு கவிஞர்களின் குரல்கள் வெளிமைதானத்தில் தெறித்துக் கொண்டிருந்த்து. கவிதைகளிலிருந்து சமீப காலமாக விலக விருப்பம் கொண்டிருக்கிறேன். கொஞசம் இடைவெளி என்பது கவிதைகளின் மேலான அன்பின் ஆழத்தின் வெளிப்படாகவே இதைக் கருத தோன்றுகிறது.. கவிதைகள் எப்பொழுதும் பிரியங்களை மறுப்பதில்லை எனக்குத்தான் சிறு இடைவெளி தேவையாக இருக்கிறது. மனம் ஒன்ற விருப்பமில்லா நிலையில் கொஞ்சம் தனிமைத் தேவைப்பட்டது. பள்ளிமைதானத்தில் தனியாக உலவிக் கொண்டிருந்தேன் நிகழ்வின் தொடக்கத்தில் சோழநிலா இந்த இடத்தில் தான் முதன் முதலாக இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டேன் என்று கூறியது. நினைவுக்குள் வருகிறது. பள்ளி விடுமுறை நாள் என்பதாலோ என்னவோ பள்ளின் மைதான மெங்கும் பெருக்கப் படாமல் இருந்த்து. வெண்மணலின் மைதாமெங்கும்  இலைகளும் சருகுகளும் பரவிக் கிடந்தன. விசாலமாக மேற்குப் புறத்தில் அமைந்திருந்த கழிப்பறைத் தொட்டியில் இலைகள் மிதக்க தடாகத்தை நினைவு கூர்ந்தன். மேலும் நடக்க விருப்பப் பட்ட கால்களின் அனுமதியில் உலவிக் கொண்டிருந்தேன். மழைக் காதலன் எதிர் தோன்ற அவருடன் சில நிமிட உரையாடலில். முக நுர்ழில் உங்களுடைய “கார்த்திகை குளிருக்கும் பலம் அதிகம்.“ கட்டுரையை வாசித்தேன். அவ்வளவு கஷ்டப்பட்டு இருமியெல்லா..................என இழுத்தார். பதிலாக புன்னகைத்து தலை அசைத்தேன். இரவு நெடு நேரம் விழித்திருப்பீர்களோ?  கட்டுரை   நிறை வாக இருந்தது.என்றார்.தம்மிருக்குங்களா? என்றேன். கிங்ஸ் ஒன்றைக் கொடுத்து பற்றவைத்தார். மனம் லேசாக மிதந்தது. ஆலமரத்தின் பருத்த உடம்பை துணைக்கு பிடித்துக் கொண்டேன். அத்ன் செதில்கள் உள்ளங்கைகுள் பருபருத்தது.

இருவரும் அரங்கத்திற்குள் நுழைந்தோம். இளஞ்சேரல்  ஏற்புரையை தொடங்கினார். என்னுடைய எழுத்தில் மணல்களலை ஒரு மணலின் அளவிற்குத்தான்  எழுதியிருக்கிறேன். ஆதி மனிதர்கள் அதாவது நமது மூதாதயைர்கள் வாழும் இடங்களை நீரி நிலைகளின் அருகில்தான் தமது வாழ்க்கைகளை தேர்தெடுத்தார்கள் இன்றும் நகரமயமாகிப்போனாலும் நாம் வாழும் இடத்திலோ அருகிலோ நிச்சயம் ஆறுகளோ வாய்க்கால்களோ. ஓடைகளோ ஏதாவது ஒன்று இருந்திருக்கும். இன்றைய பின்நவீனத்தும் அய்ரோப்பிய பண்புகளைக் கொண்டு மிகச் சீராக தம வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய மரபின் மணித உறவுகளை கூறு கூறாக்கி அதன் பசியை தீர்த்துக் கொள்கிறது. மொழி கலாச்சாரம் என எல்லா அடையாளங்களையும் அழித்து தம வெற்றியை தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடும்பங்களாக இருந்த அண்ணன் தமபி, மாமன் மைத்துணன் என எல்லா உறவுகளையும் அழித்து தன்னந்தனியான தீவு வாழ்க்கைகு தள்ளப்பட வைப்பதில் தான். பின் நவீனத்துவ வெற்றியின் சாரம்சம். அடிமைத் தனங்களை ஆதிக்கத்தை உடைப்பதாக கூறிக் கொள்ளும் நவீத்துவம் அதன்  மாற்று வழியை அமைத்துக் கொள்ளாத நவீனத் துவத்த நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.என்றார்.   மேலும் ஒருமணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்த அவரது உரையில் அரங்கம் மிகுந்த அமைதிக்குள் புதைந்திருந்த்து. கவிஞர் ,சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர்,  பட்டியலில் மிகச் சிறந்த பேச்சாளர் ஆகிவிட்டதையம் உணர்ந்து கொள்ள முடிந்த்து. (பேச்சாற்றலுக்கான தொகையை நிர்ணயிக்கலாம் என்கிற எண்ணமும் எனக்குள் வேடிக்கையாகத் தோன்றியது) மிரமணை, புராண்முசிலி என்கிற இரண்டு நாவல்களை முடித்துவிட்டதாகவும் மூன்றாம் நாவல் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் கூறி பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உரையை நிறைவு செய்தார்.


“செங்காந்தள்“ கருந்துளை இதழ்கள் அனைவரின் கைக்கும் வந்து சேர்ந்தது. இதழுக்கான தொகையை பூர்ணாவிடமும் சொழநிலாவிடமும் கொடுத்து நானும் சோ. ரவீந்திரனும் பெற்றுக் கொண்டோம். புதிய தகவல்களோடும் சம்பிரதாய நிகழ்வுகளோடும் அம்சபிரியா நன்றியுரை நிகழ்த்த விழா இனிது பெற்றது. அரங்கத்திலிருந்து வெளியே வந்ததும். இளஞ்சேரலின் சிறந்த பேச்சுக்கான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. இசை மணி, நசன், சோழநிலா, வைகறை பாலா, பூபாளன், போன்றவர்களின் அன்பு மழையில் இளஞ்சேரல் நனைந்தார். மழைக்காதலன் பெறிய அரங்கத்தில் நிகழ்த்த வேண்டிய உரையை இப்பொழுது கண்டேன் என்றார். நசன் இளஞ்சேரலிடம் தங்களுடைய தொகுப்பை டிஜிட்டலாக இலவசமாக செய்து தருகிறேன். இன்னும் முக்கியமான படைப்பாளர்களின் படைப்புகளை  நீங்கள் தேர்ந்தெடுத்து தந்தால் அவைற்றையும் டிஜிட்டலாக தொகுத்துத் தருவற்கு தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். அவருடைய அன்பும் செயலும். மனதை நெகிழ்வுறச் செய்தது அந்த அமைதி சூழ்ந்த கட்டிடத்தின் அரவணைப்பிலிருந்து வெளியேறினோம். பிரமாண்டமான விருந்து முடித்து அனைவரிடமும் விடைபெற்றோம். யாழியும் வைகறையும். முன்பே சென்றிருந்தார்கள். இசைப்பிரியாவையும் ,ஓவியாவையும் காண இயலாத தவிப்போடு கோவைக்கு புறப்பட்டோம்.

வெய்யில் கோபா வேசமாகத் தானிருந்தது,.. வழியெங்கும் நிகழ்ந்த விழாவைப் பற்றியானஅனுபவங்களின் பகிர்தல்களாகவே அமைந்திருந்தது. பேருந்துகளும், கனரக வாகனங்களும் பெருகியிருந்தன. இருபுறமுமான காடுகளும் தென்னைகளும் காற்றில் நடன மிட்டுக் கொண்டிருந்தன. மலைக் குன்றுகளை பின் நகர்த்தி நாங்கள் சென்று கொண்டிருந்தோம் பசுமைகளும் விசாலங்களும் விலகி விட்டு பரபரப்பான நெருக்கடிகளுக் குள்ளான நகர மையத்திற்குள் திரும்பிக் கொண்டிருந்தோம். காற்று எனது பின் புற தோள் சட்டையில் பட பட வென இசைத்துக் கொண்டிருந்த வேகம், வீடு வந்து சேர்ந்த பொழுது தளர்ந்து  போயிருந்தது..