Friday, June 24, 2016

ஆழம்


துளியின்
நுனியிலிருந்து எழும்பும் பாடல்
ஆழத்திலிருந்து எழுகிறது
இசையின் வயதைக் கணக்கிட
பல ஆயுள்கள் தேவை
வயது
கூடுகளாகி காய்ந்துகிடக்கும்
வெட்டிச் சருகு
ஓடும் பகல்களுக்குள் ஒளிந்து கொள்ளுதல்
சாலச்சிறந்ததின் அமசம்
அதுவே அழைத்தும் செல்லும்

அலாதி


சைவம் மாமிசங்களை அருந்தாது
போதும்
கிளிகள் பழங்களை கொத்துகின்றன
மலைக்குன்றின் இடைவெளியில் நுழையும்
காற்றுக்கென்ன அது அதன்வழி தேடுகிறது
முடியாக் கூகைகளுக்கு பெரிதெதற்கு வெறும் கண் போங்கடா
முயலின் வெண்மை ஓட்டம் வேகம் மட்டுமா
அழகே அதனிலும் அலாதி
கைவசமிருக்கும்
ஊசிகளில்
தேவையானவற்றை
நிரப்பியாகிவிட்டது
யாரைக் கொன்றது
யாரைக்கொல்வது
யாரை மயக்குவது
யாரை வீழ்த்துவது
பின்வரும்
அட்டவனைகள்
சாதாரணமாக
தட்டுப்படுவதில்லை

ஈரம்


தேசம் முழுதும் திரிந்தாலும்
இங்கு தான்
இறங்கியாக வேண்டும்
பறவைகள்