Wednesday, February 24, 2016

மென்மையை நெஞ்சோடு ஒத்திக் கொள்பவர்
எவன்
நாண்டுகிட்டாலென்ன
அந்த பட்டாம் பூச்சி
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு
எளிய சொல்



மிக
எளிய
சொல்
கேட்டாய்

மிக
மிக
எளிய
சொல்
தந்தேன்
ம்..
கூ....ம்
என்றாய்
கொஞ்சம்
யோசித்து
மிக
மிக
மிக
எளிய
சொல்லை
சொல்ல
விரல்
அசைத்தேன்
சூழலை
விட்டு
தப்புவித்தாய்
வெட்கங்கள்
சிதற
திரும்பி
ஒடுகிறது
அலைகள்
முடிவாகிவிட்டது
தலைகீழாய் விழும் நட்சத்திரங்கள் கனலடங்காஆழத்தில் திடுக்கென மரிக்கிறது
அபத்தங்களுக்கு
பலியாகும் நேரத்தில்
முதுமைக்குழந்தை நீ
புன்னகை மாறா
அம்சங்களுடன் கை அசைப்பாய்
அந்த பரிதாப நிலைக்கு சற்று தொலைவில் புதைபடுவது இந்த அசைவுகளும் தான்
உள சவுகரியம்
அந்த அறைச்சுவற்றில்
தொங்குகிறது
உற்சாகத்திற்கு தாவுதல்
என்பது
சாலச் சிறந்த வரம்
கடவுளின் யோகாவிலிருந்து
சூரியகாந்தி மலரை
பரிசளித்த ரகசியம்
சுவர்கள்
எப்பொழுதும்
கபடங்களுக்கு இறங்காதவை
மறவாமல்
சில முகங்களை
ஞாபகப்படுத்துபவை
பகல்
எப்பொழும்
சூரியனுக்கான
பகுதி
சில
நேரங்களில்
அதுவும்
நனைந்து விடுகிறது

ஞாபக நிறங்களை மாற்றிட வேண்டும்



சாதுர்யங்கள்
இணைந்துள்ள வாய்ப்பு
சாத்தியப் படடிருக்கிறது
பலம் பலவீனம்
பலவீனம் பலம்
பலம் பலம்
பலவீனம் பலவீனம்
எப்படிக் கூட்டினாலும்
காலம்
தனித்துத் தெரிகிறது
மறதிகளுக்கு உரம் போடவேண்டிய
கட்டாயம் தவிர
வேறு வழியில்லை
வாழ்ந்தேதான் ஆக வேண்டும்
அத்தனை சாதுர்யங்களையும்
ஒன்று திரட்டி
ஞாபக நிறங்களை மாற்றிட வேண்டும்
ஆய்வு அறிஞர்கள்
கூட்டங்கள்
என
பெரும் பரிசீலனைகளுக்குப் பிறகு
இறுதியாகிவிட்டது
மறதிகளுக்கான
உற்பத்திக் கலன்கனை
அதிகப் படுத்திவிட
முடிவாகிவிட்டது
வேறு வழியில்லை
உறத்த குரல்கள
ஒலிக்க
மறதிகளுக்கான
மாத்திரைகள்
மறதிகளுக்கான
அழகர்கள்
மறதிகளுக்கான
அழகிகள்
மறதிகளுக்கான
பேச்சுக்கள்
மறதிகளுக்கான
கவிதைகள்
மறதிகளுக்கான
கட்டுரைகள்
மறதிகளுக்கான
கவிதைகள்
மறதிகளுக்கான
கடிதங்கள்
மறதிகளுக்கான
சிபாரிசுகள்
அனைத்து மறதிகளுக்கான
நுட்பங்களும் தயாராகியிருக்க
சாதுர்யங்கள்
இணைந்துள்ள வாய்ப்பு
கூடியிருக்கிறது
இனி வரும் பொழுதுகளில்
மறதிகளின் வழியே
சாதுர்யங்கள்
அபாரமாக
விளையாடத் துவங்கிவிடும்
காலையில் வழக்கமான பரபரப்போடு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் தயாராகி இரு சக்கர வாகனத்தை வீட்டிலிருந்து காம்பவுண்டிற்கு வெளியே தள்ளக் கொண்டு வருகையில் கண்ணில் பட்டது. ஒரு மகிழ்வான காட்சி. இப்படி ஒரு பறவை காலையை வரவேற்றால் யாருக்குத் தான் மனம் மகிழ்ச்சி கொள்ளாது.
சாலையில் முன்னின்று சிறு மண் மேட்டை எதிர் புறமான நிலையில் கொத்திக் கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை. எனது சப்தம் கேட்டு தலை சாய்த்து என் பக்கம் திரும்பிப் பார்த்தது.
நின்று விட்டேன். அப்படியே வாகனத்தை திரும்ப வீட்டிற்குள் இழுத்து சென்றுவிட்டேன்..சில நிமிடத்தில் சப்தமில்லாமல் காம்பவுண்ட் சுவற்றில் சாய்ந்து அந்தப் பறவையை கவனித்துக் கொண்டிருந்தேன்.அது எனது அருகாமையில் குழப்பமில்லையென்று முடிவுக்கு வந்து மீண்டும் அதன் பணியைத் தொடர்ந்தது.
மிகவும் சுறு சுறுப்போடு கொத்திக் கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்து மிகவும் பசியான அதன் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
திரும்ப வீட்டிற்குள் ஓடி பள்ளிக்கு என்னுடன் வர விருக்கும் தங்கை மகன் தரணியை சப்தமில்லாமல்.இருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்திற்குப் பிறகு மெதுவாக அழைத்து வந்து அவனுக்கு மரங் கொத்திப் பறவையைக் காண்பித்தேன். இருவராக வருவதைப் பார்த்ததும் சிறு வட்டப்பறத்தலில் எதிர் வீட்டு மேற்கூரை ஓட்டின் வரிசையில் இடத்தை தேர்வு செய்து அமர்ந்தது.
கொஞ்ச நேரம் அப்படியே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சிறு இடைவெளிக்குப் பின் அதன் பசியா அல்லது எங்கள் மீது நம்பிக்கையா தெரியவில்லை மீண்டும் .கோடு போடுவதைப் போல நேராக நிலத்தைத் தொட்டது. அதைப் பிடித்துவிடலாமா?“ என்று மிக மெதுவாக கேட்டான். வேண்டாம். என தலையசைத்ததும். அமைதியாக இருவரும் வேடிக்கை பார்த்தோம்.
ஆமாம் இது மரங்கொத்தி தானே? அப்புறம் ஏன் மண்ணைக் கொத்திக் கொண்டிருக்கிறது.என்று கேட்டான். அதனின் சோகத்தை விளக்க இயலாமல் பசிதான் வேறென்ன என்றேன். சரி போலாம் லேட் பண்ணாதீங்க என்று சொல்லியபடி புத்தகப் பையை எடுக்க உள்ளே ஓடினான்.
அது தன் அதிகப் பசிக்கு மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது. இதெப்படியிங்கு வந்தது.என்று யோசித்தபடி பழைய மரம் இருக்கும் பகுதியைப் பார்த்தேன். எந்த அறிகுறியும் இல்லாமல் வானம் வெட்ட வெளியாய்த் தெரிந்தது. எதிர் வீட்டு வேப்பன் மட்டும் பாதி இலைகள் காக்கி உடுப்பகளை தரித்துக் கொண்டும் மீதி இலைகள் ஒப்பக்குச் சப்பாக கொஞ்சம் பச்சையைத் தொடுத்தும் இருந்தது.
இதற்கு முன்னால் மரங்கொத்திப் பறவையை எப் பொழுது பார்த்தேன்... ம் ....என்று யோசிக்கையில் தலைக்கு பாரம் ஏற்ற விரும்பாமல் அப்படியே அத் துயரத்தை பாதியிலேயெ விட்டுவிட்டேன்.
ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக மணடைக்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அது சுறுசுறுப்பை குறைக்கவில்லை .அதன் உடலின் சீரான வர்ண்ணங்கள் அதன அழகை வடிவமைத்திருக்கிறது.
ஊசியென மண் குப்பைகளுக்குள் இறங்கும் அதன் அலகு.ஏறக் குறைய ஒன்னரை இன்ச். இருக்கலாம் என குத்து மதிப்பாக கணக்கிட்டுக் கொண்டது மனம்..
அடுத்து செல்வதற்கு கிளைகளில்லை..மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்கிற கேள்விகளோடு தரணியின் அவசரத்திற்கிரங்க வீட்டிற்குள் சென்று விட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தேன் .காலியான அவ்விடம் உணர்த்தியது. அப்பறவை விடைபெற்றுக்கொண்டதை ..
யார் இடைஞ்சலுக்கு வந்தார்களோ தெரியவில்லை.
அதன் வருகை மனதிற்கும் இந்த காலைக்கும் மென் உணர்வைப் பரிசளித்திருந்தது.