Tuesday, December 9, 2014

கறுப்பும் சிவப்பும்
நிறைந்திருக்கும் அடையாளங்கள்
கரைந்து கொண்டிருப்பதை
யாருமே அறியவில்லையே
இப்பொழுதை சொக்கி கழிப்பவர்கள்
அப்பொழுது துடிப்பதை
இப்பொழுது காண்கிறேனே
பின்பொழுதை
முன் சொன்னால்
சங்கடம் இங்கல்லவோ
வேக்காடாய்
திரிந்து கொள்ளும்
சந்தர்பங்களில்
ஏன்
இங்கு மட்டும்
கறுப்பும் சிவப்பும்
கோபுரங்களின் நிழல்களில்
கண்ணயர்வதல்ல
காலம்
கண் கூச
கூரையிலிருந்து
கோபுரங்களுக்கு பறக்கும்
இறகுகளாகிறது
காதில் வந்து நுழைந்தது
ஓடையுமல்ல
நீருமல்ல
நீச்சலென்பது முற்றிலும் வேறு
இந்தக் காற்றுக்கு ஆயிரம் கால்கள்
புன்னகைக்குள் பொதிந்து அசையும்
வர்ணங்களை புரிந்து கொள்ள இயலாதா
துளி அசைவில்
இலைகளின் படபடப்பை உணர்வதில்லையா

பொன்னந்திஅறியாததா
அந்த உடலின் வால் அங்கிருப்பதை
உயரமே ஆகினும்
வலிஒன்று தானே
பக்கங்களில் பூரித்துக் கொள்வது
பக்குவத்தையல்லவா
அடையாளப் படுத்துகிறது
தயவு கூர்நது
சரிப்படுத்திக் கொள்
உன்னதமே
மிகுதியாகிவிடுகிறது தடவும் காற்றின்
நச்சரிப்புகள்
நாய் நக்குவதைப் போலதான்
குளிரின் ஈரமும்
குளிர் நாக்கின் வன்மை
இதமானதுதானென்றாலும்
உடல் குலுங்கத் தானே செய்கிறது
சின்ன அறுவறுப்பின் சாயலில்
வை
விளக்குச் சுட்டிகளில்
சரக்குகள் இலலை
எரிகிற தீப இலைகள்
மங்கிக் கொண்டு வருகிறது
வெளிச்சமன்றி
குதுாகலிக்கும் கொசுக்களுக்கு
பலியான வலியில்
உதறிக் கொள்ளும்
கால்களை தள்ளிவைத்து
ஆடிக் கொண்டிருக்கும்
நகைச் சுவையாட்டங்களில்
பலனில்லை
சொம்பார்
ஆடுகிற பகடியில்
பெயர் பெற்ற கிளியனே
இது கூவியிருக்கும்
குறுஞ்சொல்லை
நொடிப் பொழுதில்
சிறுத்திருந்து
வை

Thursday, December 4, 2014

கவிதைப் பக்கங்களில் சஞ்சரித்தல்





கவிதைப் பக்கங்களில் சஞ்சரித்தல்



(சுஜாதா செல்வராஜின் “காலத்தை கடந்து வருபவன்“ கவிதை தொகுப்பின் கரையில்)


சொல்ல நினைக்கிற சம்பவம் இந்த்க் கட்டுரைத் தொடர்புக்குள் வருமோ வராதோ எனபதைப் பற்றிய கவலைகளில்லை. ஆயினும் நிகழ்வுகளின் ஆழத்திலிருந்து அழுத்தும் அனுபங்களிலிருந்து உயிர்பெறும் மொழிகள் தான். கலைத் தன்மையடைகின்றன. அச்சிறு அனுபத்தை பகிர்ந்து கொள்ளுதலின் கணம். தவிக்கும் சுமையும் கூட கொஞ்சம் இறங்கலாமோ என்னவோ. 


ஞாயிற்றுக்கிழமைப் பிசாசு என் மேல் தொற்றிக் கொண்ட சம்பவம் தான் அது பிசாசை சுமந்துபடி எழுத நேர்ந்த காரணத்தால். பிசாசின்  சுமையை இப் பக்கத்திற்குள் நிராகரிக்க இயலவில்லை..  


 வழக்கமான ஒரு வெள்ளிக்கிழமை காலை.   வேலைக்கு செல்லும் அவசரம் எல்லோரையும் போல நமக்கும் அரிபரிதான்.  சிங்காநல்லாரில் உள்ள  பெட்ரோல் பங்கில்  நுழைய பைக்கைத் திருப்பினேன்


எரிபொருள் நிரப்பும் மூன்று  சீருடை இளைஞர்கள் மெதுவாக வேலை செய்த படியே மும்முரமாக கூடி  பேசிக் கொண்டிருந்தார்கள். தாமதமாகும் நிலையில் அலட்சியப் படுத்துகிறார்களே என்கிற கோபம் வேறு..  எரிபொருள் வேண்டி காத்திருப்பவர்களும் தமக்குள்ளேயே திட்டிக் கொண்டு செல்லும் ஓரிரு சொற்கள் காதில் விழுந்து கொணடிருந்த்து 



ஆயினும் கொஞ்சம் என் செவிகளை சாய்த்ததில் விடுமுறை எடுப்பது சம்பந்தமாக ஆலோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பேசிக் கொண்டிருக்கும் சீருடை இளைஞனின் முகத்தில் ஞாயிற்றுக் கிழமைப் பிசாசு கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு என்னை முறைத்துவிட்டு பேச்சை மேலே தொடந்தது.


கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு சீருடைக் காரனின் முகத்தில் அதே ஞாயிற்றுக்கிழமை பிசாசு என்னை ஒரு முறை பார்த்து விட்டு ஆச்சர்ய முக பாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்த்து. மற்றொரு சீருடைக் காரனின் முகத்தோற்றத்தில் ஞாயிற்ற்றுக் கிழமைப் பிசாசு கேளியான முக பாவத்துடன் ஆலோசித்துக் கொண்டிருந்தது.



 நிற்க விடாத அவசரம என் பக்கம்.   நிலைமைச் சோகத்தை   வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டு அடுத்த மெசினுக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன். சீருடை அணிந்த அறுபதைத் தாண்டிவிட்ட  பெரியவர் ஒருவர். தயாராகிக் கொண்டும் பக்கத்தில் இருக்கும் இளைஞனுடன் பேசிக் கொண்டும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது சவரம் செய்யாத வெள்ளை  முடிகளின் வழியே முகம் வாடியிருந்தது.  கவனித்த  சற்று நேரத்திற்குள் ஞாயிற்றுக் கிழமைப் பிசாசு பெரியவர் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டு என்னைப் பாரத்து சோகத்தை காட்டியபடி அருகே நிற்கும் வாட்ட சாட்டமான இளைஞனிடம் பேசிக் கொண்டும் அடிக்கடி கீழ் நோக்கியும் பார்த்தக் கொண்டிருந்தது.




எரிபொருள் நிரப்பும் வரிசையில் இரண்டு வண்டிகளுக்குப் பின்னால் இருந்தேன். 
அந்த இளைஞன் “தயவு செய்து நாளைக்கு வேணுன்னாலும்  லீவு எடுத்துக்குங்க  இன்னைக்கு வேண்டுமானாலும் ஏன் இப்பவே போனாலும் சரி. ஞாயித்துக்கிழமை மட்டும் லீவு கேக்காதீங்க“ என்றார். அப்பொழுதுதான் அந்த இளைஞனை கவனித்தேன் கையில் தங்க வர்ணம் மின்னும் கடிகாரமும் அவனது நவீன முறை  உடைகளும் இளம் முதலாளியின் தோரணை தெரிந்தது. அந்த பவுடர் முகத்திலும் ஞாயிற்றுக் கிழமை தொற்றிக் கொண்டு கண சிவக்க கடுமையான ஆர்டர் செற்களை திணித்துக் கொண்டிருந்தது.
“இல்லங்க போன மாசமெல்லாம் லீவு எடுக்கலங்க நாளானிக்கு........................“பெரியவரின் வார்த்தைகளை மறித்த இளைஞன்.




'போன மாதம் மூனு ஞாயிற்றுக்கிழமதா கணக்கு வச்சுக்குங்க நானே ஒருநாள் கொடுத்தேன். ஆனா இந்த மாத  இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே லீவு கேக்கறீங்க அந்த பசங்களும்  கோவிச்சுக்குறானுக அதனால என்ன சங்கடப் படாதீங்க்என்றது சின்ன முதலாளியின் தோற்றத்தில் உள்ள ஞாயிற்றுக் கிழமைப் பிசாசு.




 தவிர்க்க முடியா வேலை..... அதனால........... தான்..............என் மெலிதான குரலோடு பாதி மென்னும் முழுங்கியும் உதிர்த்துச் சொல்லிய படியே எனது வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்தார் அப்பரியவர் .அப்பொழுது சிறு நொடியில் மிகச் சோகமாக ஞாயிற்றுக் கிழமைப் பிசாசு என்னைப் பார்த்துவிட்டு குனிந்து கொண்ட கணத்தில் தான் நெகிழ்ந்த போயிருந்தேன். அந்த இடத்திலிருந்து விலகி செல்லும் வழியிலெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்மண்டைக்குள் ஏறி அமர்ந்து கொண்டது



அப்பொழுதிருந்து எனது ஞாயிற்றுகிழமைகளோடு அலசிக் பெருத்துக்கொண்டிருந்த அதன் சுமை அழுந்த்த் தொடங்கியது.  இதற்க்கான நிவாரண வழி ஒன்று தான்.  ஞாயிற்றுக் கிழமை கவிதையை எழுதிவிட்டால் அதற்குள் இறங்கிவிடலாம் அல்லது வேறு யாராவது எழுதிய ஞாயிற்றுக் கிழமை கவிதைக்குள் இறக்கி வைத்துவிடலாம் இதைத் தவிர கவிஞனுக்கு வேறுவழியில்லை.



  
    முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
   
 நுண் னூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
   
 மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
   
 மெய்நீர்மை மேனிற் பவர்


                           - திரிகடுகம்-35



(கடலில் அலை போலத் தன் மனம் எழுந்தலையாத அறிவுடையவனும்

நுட்பமாகிய சிந்தையினால் மிகுதியாகிய கேள்வியினாலும் நூல்களின் முடிவை அய்யந்திரிபறக் கண்டவனும்

குற்றத் தன்மை யின்றித் தன்னிடத்தில் உண்டாகாதபடி மனக்கலக்கம் ஒழித்தவனுமாகிய இம் மூவரும்

அழிவின்மையாகிய தன்மையுடைய முத்தி உலகத்தில் நிற்பவர்.)




பாதிக்கும் கவிதை உணர்வு எனும் பிம்பத்தை விளக்கிச் சொல்வது கடினமாயினும் முடிந்தவரை உணர்த்த விளைகிறேன்



பலமுடன் மிதிபடும் காலடியில் மண்ணுக்கும் பாதங்களுக்குமிடையே மிக மிக எளியதாய் ஆனால் ஓய்ந்து விடாமல் கடக்கும் நீர்ப் பயணத்தைப் போன்று தான் கவிதைக்கான வலிமையுமாக வேண்டும்.


அவ்வித வலிமைகளை சேர்ப்பதில் கவிஞன் மிக சுய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடிய பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடிய பக்குவத்தை எச்சமயத்திலும் வலுவாது தேர்ச்சியாக்கிக் கொள்வது அவசியம்.



காலத்திற்கேற்ப கவிதைக்கான பண்புகளை மண்பாண்டக் கலைஞனைப் போல எவ்வித வடிவத்திலும் கவிஞன் மேலும் மேலும் உருவாக்கிக் கொள்ள இயலும். இதையே பின் நவீனத்துவ மரபுகள் முன் வைக்கின்றன. .



இம் மாதிரி வகையே மிகச் சரியான பாய்தல் எனலாம்.. கவிதைச் செயல்களைக் குறித்து என் சார்பில் கொண்டாடுகிற சாரம்சமும் இவை தான்.



காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்

பாலினில் நெய்யும் பழத்துள் இரதமும்

பூவினுள் நாற்றமும் போல்உளன் எமஇறை

காவலன் எங்கும் கலந்துநின் றான் அன்றே.


 -திருமந்திரம் (நவம்பர்-22)




(காற்றினில் உணர்சியாகவும், கரும்பில். வெல்லக்கட்டியாகவும் பாலில் நெய்யாகவும் பழத்துள் 

சுவையாகவும் ,மலரில் மணமாகவும் இறைவன் உள்ளான். இவ்வாறு ஆன்மாக்களை காக்கும் 

இறைவன் எல்லா பொருள்களிடத்தும் கலந்து விளங்குகின்றான் இறைவன் பொருள்கள் 

எல்லாவற்றிலும் கலந்து மக்கட்கு இன்பம் தரும் இயல்பின்னாய் உள்ளான்.).



பொதுவாக படைப்புகளை தரிசிக்கும் குணமுடையவனானதால் ஆண் படைப்பாளர் ஆகினும் பெண்படைப்பாளராகினும் இந்தகட்டுரையில் சுட்டும் விதத்தை கவிஞன் என்கிற ஒற்றைக் கண்ணோட்டத்திலேயே சொல்லிக் காட்ட இயலுகிறேன்.  பொது அறிவுரையாக என்றைக்குமே முன் வருவதில்  உடன் பாடில்லாதவையும்  அறுவறுப்பான  விசயமும் கூட.. 



கவிஞன் என்கிற ஒற்றைச் சொல் முதலில் என்னுள் ஏற்படுகிற பிரதிபலிப்புகளிலிருந்து வருவற்க்கான வரவேறபாகவே கவிஞன் என்கிற ஆண்சார்ந்த பெயராக குறிப்பிட விரும்புகிறேன். இவை என் சார்ந்த விருப்புகளிலிருந்து ஏறபட்டவையே. .      




சுதந்திரம் பெண்ணுக்கும், ஆணுக்குமான பொது வெளி இதில் இருவரது சுதந்திரங்களையும் முன் நிறுத்தும் எனபது இயல்பானது
உடலரசியில் போன்ற துள்ளியமான சிக்கல்களை பெண் படைப்புகள் வெளிப்படையாக நொறுக்கி விடுவித்திருக்கும் சூழலில்.



.     படைப்புகளின் நோக்கம் முன் நிறுத்தப் படவேண்டியவையே தவிர, ஆண் பெண் சார்ந்த அடையாளங்களை தரித்துக் கொள்ளுதல் அல்ல. மனிதக் குலுக்களிலிருந்து பிளவுபடுத்தக்கூடிய விசமச் சமூகத்தின் நுட்பயியல் யுக்தியானதே இவை...



நான் ஒரு ஓவியம் வரைந்தேன்



பறக்கும் அந்த ஜோடிப்புறாக்களில்
ஒன்று நான் எனில் மற்றொன்று யார்
என்ற ஆர்வம் உங்களுக்கு

மூடிய கதவுக்குப் பின்னால் இருப்பது
நான் தான் என்பதை
உறுதி செய்துகொள்ளும் பதற்றம் உங்களுக்கு

அடித்துப் பெய்யும் அம் மழைக்காட்சி
என் சோகமா வெறுமையா காமத்தின் சாயலா
பெருத்த அய்யம் உங்களுக்கு

ஒரு மோப்ப நாயினை ஒத்து
என் ஓவியத்தை கலைத்திருக்கிறீர்கள்

நானொரு கவிதையெழுத விளைகிறேன்
அதிலேனும் என்னைத் தேடாதிருங்கள்


-சுஜாதா செல்வராஜ்-


இந்த சமூகம் தனி மனதை  கொத்துப்  பரோட்டோ வாக்கி ருசிபடுகிற கயமைத் தனத்தை பொறுமையாய அவ்வளவு அழகாய் கவிதையாக்கியிருக்கிறது.. கவிமனம். இவ்வகை மாதிரியான சூழலில் படைப்பு மனதைக் காப்பாற்றிப் பாதுகாப்பது வெறும் வார்த்தைகளால் நிரப்பிவிட இயலாத சாதனை செயலே.


பொய்யும் புரட்டும் கலந்த ருசியோடு திரிந்து கொணடிருக்கும் சமகால தீமைகளின் அனல் காந்தல் களுக்கிடையே சத்தியத்தை நிறைவேற்ற வேண்டியதாகவும் இருக்கிறது.
எப்பாழுதும் குரூர எண்ணங்கள் மிகுதிப்பட்டிருக்கும் வேட்டைச் சமூகமாகவே பிழைத்துக் கொண்டிருக்கும் காலம் இப்பொழுதும் விதி விலக்கல்ல..



 சமூகம் தீமைகளுக்கான ரசனைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொள்வதில் அதில் இன்புறும் கயமைத்தனத்தில் ருசித்துப் பழகியிருக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என பிரித்துப் பார்க்கவும் இயலாது.  இது ஒரு வித சுக  போதை மனநிலையைக்  கொண்டு இருக்கிறது..



சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் மிக பிரதானமானதாகவும்  எனை  பாதித்த கவிதைகளை உள்ளடக்கியிருக்க கூடிய சிறந்த தொகுப்பாகவும்.கருதுகிறேன்.
விடுபடுதலின் பக்குவத்தில்,   பதற்றமில்லா  உணர்வுகளின்,  ஆழ்நத தனமைச் சூழலின் பின்னணியிலிருந்து தமக்கான மொழியின் தொனியை உருவாக்கிப் பற்றிக் கொண்டவர் சுஜாதா செல்வராஜ்.



கவிதைகளின் சுற்றத்தில் இவருக்கான அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய குரலோடு தனித்து நிற்கின்றன இவரது கவிதைகள்
இக்கவிஞரது உலகம் அன்பை வேண்டிநிற்கும் பிரபஞ்ச மனிதனுடையதாகவும் மனிஷியுடையதாகவும் இருக்கிறது. வட்டங்கள் நீளங்கள் என எந்த  கட்டமைப்புகளுக்குள்ளும் சிக்கிவிடாத சுய ஆளுமையைக் கொண்டாதாக விரிவடைந்திருக்கிறது, இத் தன்மையே  கவிதைகளுக்கும், மொழிக்குமான மகத்துவத்தை. பெற்றிருக்கிறது. 



பரிதவிப்பும் துக்கமுமாய் வெடித்த பக்குவத்தில் தான். விடுதலை உணர்வை பெறமுடிறது என்பதே தனி மனித வரலாறும் உலக வரலாறும்.



இவ்வாறான நிலையே மாற்றுவடிவத்திற்கான திறவுகோளாகவும் ஆகிறது புதைந்து போவதும். காணாது அழிந்து போவதும் .அவரவர்களது மனப் பாங்கைப் பொருத்தது. எழுந்து பறக்கவுமான மாற்றத்தை பெற்ற மனமே படைப்பு மனதிற்கு பக்குவபட்டதாகவும் அமைகின்றது..  





புது எழுத்து பதிப்பகம் தொகுப்பாசிரியர். சுஜாதா செல்வராஜ்  பக்கம்.86   விலை . 90