Tuesday, April 29, 2014

பிழிந்து மீதியை
தோழில் போட்டுக்கொண்டு
காட்டிற்கு இழுத்துச்செல்லுகிறது
நிலைமை

திசையை
முடிவு செய்தாகிவிட்ட பிறகு

இழுத்து மென்று கொண்டிருக்கும்
நேரங்களில் தான்

அறிமுகப் படுத்திக் கொணடிருக்கிறீர்கள்
உங்கள் சௌகரியங்களை

மகிழ்வுகளில் கால் நனைத்து
ஓடிவர இயலாத கணத்தில்

முதிர்வு வழியனுப்ப சொல்லுகிறது

இந்த பயணம்
மிகப் பெரும் ஆழத்தை அடையும்
பாடலை கேட்ட பிறகு

அரவணைத்துக் கொள்ளும்
இழக்காத
இறக்கைகளுக்குள்

முழு உணர்வுகள் மூழ
வானம் தேக்கி வைத்திருக்கும் மெளனத்தை
இந்த மேசையின் மேல்
சிந்தியிருப்பதாக
குறிப்பில் இருக்கிறது

எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி
அதன் வழியே விட்டு
கலைத்த உடலை
சாய்க்க

ஓய்விலிருக்கும் கண்களுக்குள்
ஓரிரு குறிப்புகள்
ஒட்டிக்கிடக்கிறது

எநத பரபரப்புமில்லாது
வாசித்து முடித்ததும்
தானாகவே அழிந்து விட
அமைதியாகவே தலைசாய்ந்தேன்

சில கணங்கள் முடிந்து
விழித்த பொழுது

மேலும்
ஒரு குறிப்பில்

இந்த சாந்தம் தான்
உனக்கிருக்கும் கொடை

இந்த இறுக்கம் தான்
காலமெல்லாம் நான் உனக்களித்திருக்கும்
ரகசியமும் என

வானிலிருந்து நேரிடையாக
விழுந்த குறிப்பில் காணப்பட்டது

எழுந்து படுக்கைக்குச் சென்றேன்
பொது வெளி

காற்றே
மறைந்து போனவழிஎங்கு

இல்லாது போன
இழப்பை

ஏக்க மூச்சுகளால்
அடையாளப்படுத்திக்கொள்ளும்
நிசப்த வெளியில்

தவத்தைப் போல
அசையாது
நிலைத்து விட்ட
அப்பெருமரத்து இலைகளின்

ஆகப் பெரும் ரகசியம்
எதுவாயினும்

அதன் பிம்பம் படிந்த
நடைக் கால்களினிடையே

நிழலைப் போலவும்
பாதை நிறைந்து கிடக்கிறது
கோடுகளை வரைபவர்கள்

கோடுகளை வரைபவர்கள்
முதலும் கடைசியுமாய்
சிறிதும் பெரிதுமாய்
வர்ணங்களை இட்டுக் கொள்கிறார்கள்

ஆசைகளென்பதை
நிரந்தரமாக்கவா இயலும்

கதவுகளாலான உலகத்தை
செய்ய முயலும் பாவியர்களின்
கற்பனைகள்

தொலைவில் அநாதரவுகளாக
திரிந்து பறக்கிறது

கதவுகளாலா?
தடை செய்து விட முடியும்.
எதையும்.

இங்கு
கதவுகளென்பது
வறையறைகளின் குறியீடு
அவ்வளவே
சொல்லுக்கும்

எழுத்துக்கும் இடையே

அழுத்தம் உலவிக்கொண்டிருக்கிறது

அப்படியே

ஆமாம்

அப்படியே

என்னைப் போலவே