Thursday, May 2, 2013

வெளிச்சமாய் எரிந்து கொண்டிருக்கும் கதைகள் மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள் குறித்து



   வெளிச்சமாய் எரிந்து கொண்டிருக்கும் கதைகள்
          
               (தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்
                      சிறுகதை தொகுப்பு குறித்து)
வழக்கு மொழியில் கதைகள் என்பது பொய்களின் பரந்த எல்லைகளைப் போலான தோற்றங்களாக  பலரும் நம்பப் படுகிற நடைமுறைச் சூழலில் இந்தச்சிறுகதைத் தொகுப்பு விரிந்து கிடக்கிற அதன் மாயைகளை பொய்த் தோற்றங்களை உடைத்து நொறுக்கி விட்டு தன் ஆழ்ந்த கனமான இருப்பை நிலை நிறுத்துவது மட்டுமல்லாமல் கதைகளின் ஏராளமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருப்பதை நிச்சயமாக இந்த்த் தொகுப்பின் நுழைவாயிலில்நுழைந்து  
இத் தொகுப்பின் வழியாக வெளியேறும் ஒவ்வொரு ஆழ்ந்த மனங்களும் கண்ட்டைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கதைகள்இயற்கைவாழ்நிலங்களோடும் உயிரினங்களோடும் கலந்துகிடக்கிறது. இவைகள் பிரபஞ்ச நிகழ்வுகளில் பிறப்பவைதான்இதுவரைதமக்கான இறுக்கங்களோடு தொடர்ந்து கொண்டிருக்கும் பண.பாட்டுச் சூழலை அதன் முகத்திலிருந்து துவங்காமல் மாரி செல்வராஜ் என்கிற கதையாளன் தன் அகத்திலிருந்து தொடங்கியிருக்கிறார். என்பதே சான்று.
பரந்து பட்ட எல்லைகளை நாம புனிதங்களாக அதன் பக்கத்தை தரிசித்துக் கொண்டிருக்க இந்த கதையாளி எல்லைகளை அழித்து மாய வண்டாக நுழைந்து அதன் செவிவழியாக வெளியேறும் பாசாங்குகளற்று கடந்து செல்கிறார் கதைகளின் வழியாக
எதார்த்த நிலையிலிருந்து அதன் வரிசையிலிருந்து ஏன் இந்தக்கதைகள்விலகி பயணிக்கின்றன். நிகழ்கால நிகழ்வுகளோடு ஏன் பயணிக்க மறுக்கிறது. அறம் சார்ந்த மௌனங்களை தீவிரத் தன்மைகளின் மூலமாக மிகவும் ஆக்ரோசங்களான உணர்சிகளோடு போராடி நிறுவிக்க முயல்கின்றன 
மென் உணர்வுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட குணங்களை வழியுறுத்துகிற பாத்திரங்கள் ஏன் இவ்வளவு வெளிப்படையாக சுதந்திரமாக கதையின் வட்டங்களுக்குள் அதன்களின் உலகத்திற்குள் வலம் வருகின்றன.இப்படியான தொடரும் வினாக்களிலிருந்துகொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வாசகனின் தேங்கிக் கிடக்கும் கூட்டுக் கிளைகள் இந்தக் கதைகள் வழியாக கதாபாத்திரங்களின் வழியாக வளர்ந்து தழைத்த நிறுவப்பட்ட கிளைகள் முற்றிலும் சடச் சட வென உடைந்து விழும் சப்தங்களில் வழக்கமான வாசக மனம் துடி துடிப்பதை உணரவும்  அதே சமயம் நிராகரிக்க எத்தனித்தாலும் இயலாதநிர்பந்த்த்தில்  மனங்களில் அல்லது மூளைகளில் பதிந்து தமக்கான குதர்க்கமான கேள்விகளை உற்பத்தி செய்து அதன் மூலம் சம்பிரதாய வழக்கங்களிலிருந்து தனித்த கண்களின் வீச்சுக்களில் அகலவிழித்துவைக்கத் தொடங்கிவிடும் .
உடுக்கு.- வன தேவதை-அலைந்து கொண்டிருக்கும் கடல்- ஆகிய கதைகளில்  உடல் ரீதியான வதைகளை உரக்கப் பேசுகின்றன சுய தவிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன மௌனங்கள் பெருத்த ஓசைகளோடும் இது வரை கட்டமைக்கப் பட்ட பீத்தல்களான சப்த குரல்கள் உதிர்ந்து அமைதிக்குள்.நுழையைநேரிடும் கட்டுடைத்தல்களை.இந்தக் கதாபாத்திரங்கள் முன் நின்று செயலாற்றுகின்றன.
வெத்து இழிவு பேச்சுகளால் ஊனமாக்கப் படும்அசூசை மொழிகளைநிலை நிறுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில் அதே இழிவு வசைகளால் உரக்க்க் கத்தி தமக்கான விடுதலை அறத்தை நிலை நிறுத்திக் கொள்ளப் பொராடும் வித்தையை வாசக மனதில் பதியனிடும் இக் கதைகளின் வழியாக நம்க்கான நமக்குள்ளிருக்கும் ஒவ்வொருவருக்குமான புதிய புதிய மாற்றங்கைளை  விளைவிக்கக் கூடிய நிலைமையைத்  தவிக்கும் ஒவ்வொரு சூழலிலும் இந்தக் கதைகள் ஏதாவது ஒரு கணத்திலேனும் உயிர்த்துவிட ஏதுவானதாய் உசுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவைதான்.
கதைகளுக்குள் பெண்ணியத்தின் குரல்கள் பெரும்பாலும் உரக்க கத்தும் தொனியை கொண்டுள்ளது தமது ஆற்றாமைகளை-உணர்ச்சிகளை- தேவைகளை-பரிதவிப்பை- சுதந்திரத் தன்மையோடு முன்னிருத்துகிறது.
எதுவெல்லாம் புனிதம் என்கிற நியாயமான பாதிக்கப்படும் தொனிகளில் சொல்லி விசும்பும் உணர்ச்சிக் குரல்களாக பெண்ணிலைக் கதாபாத்திரங்கள் முன்னிற்கு நிற்கின்றன.
எல்லா அடைப்புகளையும் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் தடைபட்டிருக்கும் கதவுகளை உடைத் தெரியும் பலம் கொண்ட வர்களாக கதைகளில் நிறைந்திருக்கிறார்கள் 
தாத்தாவை நான் தான் கொன்றேன் – தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்-மகாத்மாவைக் கொல்ல ஒரு சதித் திட்டம்-சென்பக வள்ளி புராணம் போன்ற கதைகளில் பால்ய வயதுகள் –பள்ளிப் பருவ விளையாட்டுகள்-ஆசிரியர்கள்- நண்பர்கள் என கபடமற்ற .ஃபுயுர் துடிப்புகள் என பால்ய வயதுகளிலேயே பசுமையாய் உறைந்து விட்ட முதிர்ச்சி மனங்களில் ரகசியக் குகைகளை ஏறபடுத்திக் கொண்டிருக்கும் பயணத்தில்.
அப்படியான அகல் விளக்கில் வெளிச்சமாய் எரிந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜின் மனம் சிறப்பாக இக் கதைகளில் பதிவாகியிருக்கிறது. என்பதை இந்தக் கதைகளே சாட்சி  
நிகழ்கால நிகழ்வுகளின் வியப்புகளில் புரியாது விழித்துக் கொண்டிருக்கும் தனித்த நிலையில் மாபெரும் ராட்ஜச உருவங்களுக்கு அருகில் சொட்டுப் புள்ளியாய் ஊரும் உணர்வுகளில் மிகவும் அந்நியப்பட்ட இடத்தைக் கொண்டிருக்கும் இருப்புதான் பால்யம்
முழுதும் சம்பந்தமில்லாத இப் பெருவெளி அதன் ஆதிக்கத்தை பிஞ்சு மனதின் முன்னால் ஆடும்  தில்லாலங்கிடி ஆட்டத்தில் பயநடது அல்லது சொல்லவியலாத உணர்த்தவியலாத மொழியால் தனிமைப்பட்டுக் காணும் பிஞ்சு விழிகளுக்கு முன்னால் பாலானாலும்-கள்ளானாலும் அன்பும் வெதுவெதுப்பும் பயமும் மெற்ற எல்லாமே முதிர்ந்த காலம்வரை நிழலாகத் தொடரும் என்பது மறுக்க இயலுமா என்ன
இப்படியான மிகப் பெரும் அழுத்ததை அல்லது உயிர் நிலையை பத்திரப்படுத்தியிருக்கும் கதையாசிரியனின் ஆற்றல் இந்த்த் தொகுப்புக் கதைகளில் மின்னலிடுகின்றன
ஆனந்த்-ஷா என்கிற கதை வழி தொடரும் அலைபேசி உரையாடலில் பயணிக்கும் கதை இந்தக் கதையில் “அலோ“ என்கிற சொல்லில் தொடஙகி
“கல்யாணப் பத்திரிக்கையைப் பார்ர்த்தாயா?“
 “நாளையோட இந்த நம்பரை அழிச்சுடுவேன்“
“ஓகே“
“நீ லவ் பண்ணிணயா இல்லையா““
என நீண்ட உரையாடலில் தொடர்து இருவரும்  “பை“ என விடை பெறுவதாக கதை முடிவடைகிறது.  
சந்திக்க இயலாத சோகத்தை பெரும் பிரிவை அல்லது இடைவெளியை மிக இயல்பாக கடக்க முயல்கிற பாங்கு அருமை. கடைசியாய் குரலை ஸ்பரிசித்துக் கொள்ளும் இன்பம் கலந்த மென்மையை இழையோடவைத்திருக்கிற வேளையில் பொலியாய் உதிர்ந்து கொண்டிருக்கும் சொற்களில் மிதக்கும் இரு குரல்களும் இயல்பான பாங்காய் விலகி செல்லும் நுட்பம் அழகு
இந்தக் கதையில் உணர்சிமயமான தடுமாற்றத்தையோ ? பிரிவின் அழுத்தத்தையோ வாசகனுக்குத் தருவதாக இல்லை என்பதே எழுத்து நடை அல்லது கதையாளனின் யுக்தி என்றே கூறலாம்.
நடைமுறை இடைஞ்சல்களிலிருந்து லாவகமாக தம்மை விடுவித்துக் கொள்வதான விடுதலையை இந்த கதை மாந்தர்களைப் போலவே வாசகனும் ஒன்றாகிவிடகிறான்.என்பதே கதையின் பலம்.     
மொத்த கதைகளின் பின்னுலமாக நெல்லை வட்டாரங்களின் கோயில்கள் –நதிகள்-புனைப் பெயர்கள்-மனிதர்கள் பற்றியான நிலச்சூழல் முழுதும் படிந்திருப்பது மிகச் சிறப்பு
ஊரைத் தொலைத்த மனிதர்கள் என்றும் உருவங்களைத் தான் தொலைத்திருக்கிறார்கள்  போலும்.
நகர வாழ்க்கைக்கு உடலும் உருப்புகளும் குணங்களும் வழக்கப் பட்டாலும் மனங்கள் மட்டும் சொந்த மண் சார்ந்த சட்டையை உரித்துக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சனம்.
இயக்குனர் ராம் தமது முன் உரையில் நகரம் கிராமத்தைக் காட்டிலும் பத்திரமானது என்று தோன்றுகிறது. சென்னையில் யாரும் யாருக்காகவும் பயப் பட வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை அந்த கருத்திற்கு ஒவ்வாதவன் நான் இன்னும் கொஞசம் ஆழமாகச் சென்றால் கிராமங்களில் சாதிய எதிரிகள் எங்கெல்லாம் இருக்கிறார்கள். என்பது புலப்படும் தெளிவு சென்னை மட்டுமல்ல நகர மெங்கிலும் யார் எதிரிகள் யார் நண்பர்கள் என்று காணக்கூடிய சாத்தியங்கள் மறைந்தே கிடக்கின்றன.ஆபத்து என்பதும் இழப்பு என்பதும் உடல் சார்ந்த்து வன்முறை சார்ந்த்து மட்டுமல்ல நிராகரிப்புகளில் பின் தள்ளப்படுகிற நிலமைகளில் தான் அந்த விஷங்கள் பரவிக் கிடக்கின்றன.சாதிய மனப் பான்மை மறைக்கப்பட்டு  அவைகள் தம் முகத்தை வேறு வேறு வடிவங்களில் ஒப்பனை கொண்டுள்ளன இவைகளில் சினிமா- இலக்கியத் துறைகளும் விதிவிலக்கல்ல.
கிராமங்களில் சாதியம் உடனடி பாய்சன் என்றால்- நகரங்களில் “ஸ்சுலோ“பாய்சன்களாக“வீரியம் கொண்டுள்ளன என்பது தான் எனது கருத்து.
பல எண்ணற்ற சிறந்த படைப்புகளை படைப்பாளர்களை பதிப்புத் துறையில் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் வம்சி பதிப்பகத்தின் மூலம் இந்த தாமிர பரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற இந்த்த் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தமிழக அரசு விரு பெற்ற சுமதிராம் அவர்களின் “கோடிட்ட இடங்களை நிரப்புதல்“ கவிதை த்தொகுப்பு வம்சி பதிப்பகத்தாருடையது தான் என்கிற வரிசையில் மேலும் ஒரு சிறப்பான பதிப்பு வரிசையில் இந்த சிறு கதைத் தொகுப்பும் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
 மிகவும் எளிமையான மொழி நடை இவருக்கு வாய்த்திருக்கிறது.- நலம்.