Thursday, December 20, 2012

புல்லாங்குழலோடு அழையும் கண்ணன்

   புல்லாங்குழலோடு அழையும் கண்ணன்



எஞ்சிய புல்லாங்குழலை மட்டுமே
தனதாக்கிக் கொண்டு

கொஞ்சி துயிழெலுப்பும் கோபியர்களை
அவரவர் வீட்டுக்கு திருப்பி
அனுப்பி விட்டு

உள்ளே அரித்துக் கொண்டிருக்கும்
எல்லா வேதனைகளையும்
புல்லாங்குழலால் இசைத்தபடி
அழைந்து கொண்டிருக்கிறான் கண்ணன்

மார்கழிக் கூதலில் பிரிந்த
கோபியர்கள் குமுறும் ஏக்கங்களெல்லாம்
வாசணைகளாய்
கண்ணனைச் சுற்றிய வனமெங்கும்
மிதந்து கொண்டிருந்தன

மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கூட
துாது சொல்லாத
வெகு துார வந்து விட்ட கண்ணன்

மார்கழிப் பாடல்களை
புல்லாங்குழலால் இசைத்தபடி
கடந்து போவதை அறிந்த மக்கள்

அறுவறுப்பான பட்டங்களை சூடியபடி
கடந்து கொண்டிருந்தார்கள்

வெறுத்துப்போய்
திருச்சி சாலை பக்கங்களில்

கொஞ்சகாலம திரிந்து கொண்டிருந்த கண்ணன்

 கதிரி“ கஸ்துாரி“ வசந்தா“ சிரிகரி
போன்ற பஞ்சாலை மில்களை

இயக்க வைக்கும் முயற்சிகளில்
தோல்வி கண்ட துயரங்களில்

நகரத்தை விட்டு காடுகளுக்கு
திரும்பியிருந்தான் கண்ணன்

தற்பொழுது
காடுகளையும் இழந்து விடும்
அபாயத்தில்

கையிலிருந்த புல்லாங்குழலை
பத்திரப்படுத்தி ஒரு முறை
உற்றுப்பார்த்து முத்தமிட்டு

ஓராயிரம் இசைகளோடு
நடையை கட்டுகிறான்

கோபியர்களின் கண்ணன்
 

 

Wednesday, December 19, 2012

டிசம்பர் சீசன்


டிசம்பர்  சீசன்


பலாபழ மௌனத்தை
கூறு போட்டுக்கொண்டிருக்கிறேன்
உருவாகிக் கொழுத்துக்கிடக்கும் அதன்
பெருத்தவுடலின் அங்கங்கள்
உறைகளுக்குள் மறைந்துகிடக்கின்றன
அவ்வளவு பொக்கிசங்களான
அவைகளின் ருசிகளை சுவைப்பதற்கு
எவ்வளவு இம்சைகளுக்கு
உள்ளாக வேண்டியிருக்கிறது
அதனதன் உழைப்புகளுக்குள்
அதனதன் உணர்வுகள்
எஞ்சியபடிதான் தொடர்கின்றன
மொய்க்கின்ற ஈக்களின்
அர்த்தங்களைப் பற்றி கவலையில்லை
அடிக்கோடுகளில்லாது
இணைந்துகிடக்கின்றன
எல்லாமுமாகிய எல்லாம்
இவ்வுலகம்
இயங்கிக் கொண்டுதானிருக்கிறது
 கர்த்தாவே
டிசம்பர் சீசனை ரட்சியும்

Tuesday, December 18, 2012

பழைய காதலி

பழைய காதலி


இதுவும் நமச்சிவாயம்
எதுவும் நமச்சிவாயம
அருணாச்சலத்தைப் போற்றிக் கொண்டிருக்கும்

எஸ் பி.பி-ன் குரலில்
மிதக்கும்
ரம்மியமான அதிகாலை

அண்ணாச்சிகடையை நோக்கிய நடை
விடியாத இரவின் இறுதி நேரம்

எதிர்பாராத சந்திப்பு
வரப் போகும்ஆவின் பாலுக்காக  
காத்திருக்கிறோம்

பனியில் நனைந்த காலை
இருவர் மீதும்
இறங்கிக் கொண்டிருக்கிறது

விசாரிப்புகளின் வழியே
நின்று கொண்டிருக்கிறேன்

பழைய காதலி ஒருத்தி
புதிப்பிப்பதற்காகவே
இந்த மார்கழி குளிர் வதைப்பதாக
கூறுகிறாள்

நிகழ்கால நிலவரங்களால்
பயிற்சிபெற்ற அனுபவங்கள்
அவளையும் மீறி
கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன

ஆத்ம காதலின் எல்லா
வர்ண்ணங்களையும் இழந்துவிட்ட
காலத்தில்

பழைய காதலி
பழையகாதலியாகவேயில்லை

எல்லாமே நிலை குழைந்து போன
இடத்திலிருந்து விலகிச் செல்கிறேன்

மீண்டும்
பழைய காதலி
பழைய காதலை

சில்வர் நிறத்தில் பூசிக் கொண்டிருப்பாள்
 

Monday, December 17, 2012

தடுமாற்றம்

தடுமாற்றம்



தொடர்ந்து
விடுத்துக் கொண்டேயிருக்கும்
அழைப்புகளில்

எதிர்பார்க்காத அழைப்பு
எதிர் பார்த்த அழைப்பு
வர வேண்டிய அழைப்பு
தவிர்க்கவியலாத அழைப்பு

வரவே கூடாத அழைப்பு

இப்படியான தடுமாற்றத்தில்
தவித்துக் கொண்டிருக்கும்
நிர்பந்தங்களுக்கிடையில்

துடித்துக் கொண்டிருக்கிறது

மேசை மேல் கிடக்கும்
செல்லிடப் பேசி

Sunday, December 16, 2012

அப்படி அப்படியே கிடக்கட்டும்

அப்படி அப்படியே கிடக்கட்டும்


கிழக்கும் மேற்கும்
ஒன்றாகிவிட இயலாது

தெற்கும் வடக்கும் அப்படித்தான்

கிழக்கும் மேற்கும் இணைந்துவிட்டால்
சூரியனுக்கு சிக்கல்

திசைகளெல்லாம் ஒன்றாகிவிட்டால்

அவை அவைகளின் உடல்களை
என்ன செய்வது

எதுக்கு வம்பு

அது அது
அப்படி அப்படியே கிடக்கட்டும்

உதிப்பதும் மறைவதும்
தனித்தனியென்றால்

இது தானே சரி

மாயபட்சிகள்

மாய பட்சிகள்

பயணத்தை விரைவாகத் துவங்கிவிட்ட
முதல் வருகைக்கான வாகனம்
சரக்குகளோடு நெருங்கிக் கொண்டிருக்கிறது
கால நிலை கருதி
பக்குவத்தோடு பயிரிடப்பட்டவர்களின்
விளைச்சல் நிலங்களிலிருந்து
உயிர் பெற்று வந்த பூதங்கள்
அவை அவைகளக்கான உடல்களை
 தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன
பழைய காலத்திற்குப்பிறகு
200 கீலோமீட்டர் தொலைவிலிருந்து
உருப்பெற்று வந்தவன்
ஒரு யோகியின் சாயலோடு
வருகைக்கான தகவல் குறிப்புகளை
அனுப்பியிருக்கிறான்
பாதஅணி பட்டயிடமெல்லாம்
எழும்பிக்கொண்டிருக்கும்
மாயப் பட்சிகளின் கண்களில்
கருணைகளை அடைத்தாயிற்று
தோன்றுமிடமெல்லாம் உடன் வர
துவங்கும் எத்தனங்கள்
வர்ண வர்ண காட்சிகளாய்
ஜொலித்துக் கொண்டிருக்கிறது
விளையாடும் மகிழ்சிகளுக்கிடையில்
செறுகப்படும் எந்திரங்களின்
விசைக்குணங்கள்
அறிந்தவர்களின் மொழிகளில்
மிகவும் இலகுவான மேலாடைகளால்
மறைந்துகிடக்கும் பக்குவப் பதுமையை
கொள்ளையிட்டு விடவோ என்கிற
திரு  க்களுக்குத்தான் மிஞ்சுகின்றன
பிரமிப்புகளின் அரிதாரக் கலைகள்

Saturday, December 15, 2012

அந்த 4 எழுத்துக்குத் தானே


  அந்த 4 எழுத்துக்கத் தானே


அந்த 4  எழுத்து களுக்கத் தானே
இத்தனை ஆர்ப்பாட்டங்கள்

எவ்வகை நான்கு என்பதில்
குழம்பி   ய அவர்களும்
குழப்பா  தஅவர்களும்
இருக்க  த்தானே செய்கிறார்கள்

உலகத் தீரே சொல்லுங்கள்

வித வித  ங்களான
கொஞ்சல் களும்
சிரிப்பு  களும்
நடிப்பு   களும்
படிப்பு  களும்
பகட்டு களும்
நாடகங் களும்
கதைகளும்
கத்தரி க்காய்களும்

ஓட்டமா ஓடிய பொழப்பு
இயழ்பா கத்தான் தீர்ந்து  விடுதா

கை தட்ட
கை தட்ட

ஊதிக் கொண்டிருக்கும் பலுான்கள்
உடைந்து விடக் கூடாது என்று தான்
நினைக்கிறோம்

யார்கையால் உடைந்தாலென்ன
உடையாமலா போய்விடும்

சத்தமே இல்லாமல் போய்விடத்தானே

உடுக்கை அடித்து
ஜக்கம் மா சொல்கிறாள்

Thursday, December 13, 2012

ஞாபா வின் வசீகர எழுத்துக்கள்



ஞாபாவின் வசீகர எழுத்துக்கள்


பொழியும் ஞாபாவின் எழுத்துக்களை
பொழியாது விழுங்கிக் கொண்டிருக்கும் பூதம்
தானே தின்று கொண்டு நெடுங்காலமாய்
வாழ்ந்து கொண்டிருந்தது
தனது இடத்தை பெரும் அகலமாய்
பரப்பிக் கொண்டுவிட்ட அதன்
வாழ்நிலத்தின்மீது வசீகரமாய்
ஞாபாவின் எழுத்துக்களை தவற விடாமல்
தனதாக்கிக் கொண்டு பூதம்
நாளடைவில் மிகவும் ஜொலிப்பின் நிறங்களாகி
மிளிர ஆட்கொண்டிருந்தது
எந்த மாற்றத்தின் கருணையோ
எந்த வெளிச்சத்தின் விசையோ
அந்த வசீகரபூதம்
ஒரே ஒரு நாள் எதிர்பாராது
செறிக்காத தனிமையின் பதற்றலுக்கு
ஆறுதலாய் என் மடியில் அமர்ந்து
சொல்லிக்கொண்டிருந்தது
எஞ்சிய மீத சதையையும் அதற்கு பரிசளிக்க
ஆயத்தமாகத் தான் இருக்கிறேன் என்பது
அது அறிந்ததோ இல்லையோ
தின்னத் தரும் அழுத்தத்தோடு அதனிடம் கூறினேன்
என்ன எதிர் பார்ப்போ இந்த அர்பணிப்பும் அரவணைப்பும்
அதனிடம் கூறினேன்
விரக்தியின் ஆற்றலோடு ஒரு முறை
நேராக பார்த்தபடிஆழமாக
சிரித்து விட்டு ச் சொன்னது பூதம்
சதை ருசி அழுத்துப் போய்விட்ட
பசியேதுமற்றநிறைந்த களிப்போடு தான்
இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறேன் இக் கணத்தில்
எல்லாம் நிறைவாகி விட்ட பொழுது
உண்மையைச் செய்யலாம்என்று
எண்ணியதன் விளைவு தான் இந்த பிரியம் என்றது பூதம்
தான் வழுங்க விரும்பாத நேரம்
ஞாபாவின் எழுத்துக்களை
இலகுவாக பொழியவிட்டதன்விளைவும் தான்
உனது இந்த கவிதைக்கு காரணம்
என்பதை நான் சொல்ல வருகிறேன் இளவேனில்
என்றது பூதம்
ஞா பா வின் எழுத்துக்களை ப்பற்றியல்லஎனது சங்கதி
விட்டுக் கொடுத்தபூதத்தின்கருணையும்
அதன் வரலாற்று மர்மத்தையும் தத்துவத்தையும்     
பற்றித்தான் என்கிறேன் நான்
வெற்றிடத்தின் எல்லா இடைவெளிகளிலும் உருவாவதுதான்
எங்களது சந்ததிகளின் முறை என்று சொல்லியபூதம்
சொற்களின் வெற்றிடத்திலிருந்து காற்றின் சப்தங்களோடு
மறைந்து போனதுஅது
எவ்வித முடிவையுமே சொல்லவியலாத கவிதையை இத்தோட நிறுத்தி விட்டு  விழித்துக் கொண்டிருக்கிறேன்
பாதி வெளிச்சமும் மீதி நிழலுமாய் என் மீது படிந்த கொண்டிருந்தது
இந்த நாள்

(இலக்கியமும் எழுத்தும் வாழ்வும் விட்டு விலக நேர்ந்த காரண புதங்கள் பற்றியல்ல எழுத்தின் எழுதவேண்டிய பிரியத்தின்ஈரமே இந்த வரிகள்)

(அய்யா ஞானபாரதி அவர்களுக்கு)

Monday, December 10, 2012

கூ..........குக்........கூ

 கூ.......குக்.....கூ


கூ.........
குக்.....கூ.......

குயிலொன்று கூவ
கிளைகளில் தான் உதிர்ந்திடுமோ
கனிகள்

கானகத்தில்
ஒவ்வாத குரலொன்று
அலைய

சலனங்கள் தான்
வழிந்திடுமோ

சடச் சடவென உடைந்த
மரக் கிளைகளின்
சப்தங்களில்

இடம் மாறி அமர்ந்த
பறவைகளின் வழித்தடங்கள்

குறைந்தா போய்விடும்
இந்த குவளயத்தில்

குயிலொன்று கூவ
உண்டன்றோ இனிமை

நெஞ்சினிக்க
பாட்டொன்று கேட்க

குயிலொன்று
கூவுதுங்ங்ங்ங்ங்ங்கோவ்

Thursday, December 6, 2012

அங்குமொருகீதம்

அங்கு மொருகீதம்

நிலை குலையாத இருப்பை
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
வழி சொல்ல ஏதுமுண்டோ

ஒரு மலையை
தள்ள நினைப்பது தானென்ன
இந்த நீர்ப் பயணத்திற்கு

உறத்த மூச்சோடு
உந்தி மோதிக் கொண்டிருக்கும்
கடல் பாறையின் ஈரம்
நீராலானது தான் என்றாலும்

அங்குமொரு கீதம்
பிறப்பதென்பது தான் நித்தியம்

அந்த மனநிலையில்
அந்த கணத்தில்
அங்கு ஒரு ஜீவன்
கரைந்து போவதற்கு
தடைஎதுவுமுண்டோ

சொல்லடி சம்பூரணா

Wednesday, December 5, 2012

அவ்வளவே


அதன் குரல்
அதன் சப்தம்
அதன் பாட்டு

அதன் பிரியம்
அதன் சொல்
அதன் சிறகு

அதன் கூடு

அதன் துாரம்
அதன் எல்லை
அதன் படிமம்

அதன் முடிவு
அதன் இழப்பு
அதன் உலகம்

அதன் மீதான புகார்களும்
அவ்வளவே

சிறு புல் அசையும் விடுதலை

சிறு புல் அசையும் விடுதலை


மிக இலகுவாக சூழப்படுகிற சமிக்ஞையில்
இந்த மிதமான வெய்யில்
ஏதோ காரணத்தை புலப்படுத்துகிறது

இறக்கமற்று அப்பிக் கொண்டுவிட்ட
அமைதிகளின் வடிவங்கள்
புனிதங்களாகவே தான்
இருந்து கொண்டிருக்கிறது

புகார்களோ
குழப்பங்களோ
எதிர்பார்ப்புகளோ
அச்சங்களோ

எதுவுமற்ற உலகத்திற்குள்
பிரவேசிக்கவே விரும்புகிற

பறவைகளின்
அந்தர பறத்தல்களில்

நிகழும் கணங்களில்
மென்அதிர்வுகள் ஏதுமில்லை

எளிய வானம்
தம் பிரியத்திற்க்காய்
நிறம் மாற்றிக் கொள்கிறது

சிறு அசைவுகளில் நிகழும்
மாற்றங்கள் தான்

வேடிக்கைகளுக்கானது மட்டுமல்ல

சிறு புல் அசையும் விடுதலை
 கொண்ட  பிரபஞ்சத்தில்
சப்தங்களின்றி
பரவிக் செல்லும் வாசனைகளில்

ஒரு பூ வாவது
பூக்கத் தானே செய்யும்

அதனதன் இயல்புகளில்
நிறைந்து கிடக்கிறது

சொல்லொணா விதங்கள்