Wednesday, February 27, 2013


அந்த திசையை நோக்கி
குறுக்காக கடப்பவர்களைவிட்டுவிட்டு
நடு இடத்தில் நின்றிருக்க
வருந்தும் நாளுக்கான சூத்திரத்தில்
எந்தெந்த கைகளோ நீளும்
அதுவும்மட்டுமல்ல
எதுவும் அதுபோலவே சொல்லும்
சாகாது

காலம்


இடிபடுகிற கட்டிடத்தை உற்றுப்பார்த்து
நெஞசம் பதறுகிற நிலைமையில்
அலைகிறது பறவைகள்
அதிர்சியென துவங்கிவிட்ட பிறப்பில்
தவிர்க்கவியலாது
துரத்திக்கொண்டிருக்கும் காலம்
அங்கும் இங்கும்
எத்தனை அழகாய்
பொய்களை கற்றுத்தருகிறது
பாருங்களேன்

காக்கா........

காக்கைகள் கொத்தி தீர்த்துவிட்ட
அலுப்பில் பறத்துவிட்டன கூட்டம்
லொள்ளை யாகிப்போன தலையோடு
கிடந்த நாளை
விட்டுப் போய்விட்டது எல்லாம்
தார் சாலையோடு சாலையாகிப்போன
பிந்தைய நாட்களில்
தொடர்ந்து கொண்டிருக்கிற பயணத்தில்
எவ்வித பூரிப்போ ஆரவாரமோ
இல்லவேயில்லை
காக்கா கூட்டங்ளாகவேவரும்
என்பதெல்லாம் இல்லை
ஒன்றை ஒன்றாகவே சரியாய்புரிந்து கொள்ளுகிற
வாய்ப்பு மட்டும்
தற்பொழுது வரவே கூடாது
யாவருக்குமிடையில்

Monday, February 25, 2013

குருவிகள் பாட.......


குருவிகள் பாட
அதிர்வுகளா ஏற்படும்
புரு புரு ஊட்டும்
சுகந்தானல்லவா
வெப்பத்தில் வெந்து புழுங்கும்
பகல் உறைந்த காட்டிற்கு
தனிப்பட்ட வகைமையென உண்டோ
அன்பிற்கு
ஆனாலும்
பொது என வந்துவிட்ட பின்
சுயங்களுக்கல்லவோ விடுமுறை
சர சர வென ஏரிப்போய்விட்ட ஏணியில்
பழுதடைந்த தென்னவோ காலமல்லவா
அப்படியாவா இருக்கிறது முகம்
அப்படியேதான் இருக்கனுமா நிலை
உயரத்துக் கோம்பையிலிருக்கும் கண்களுக்கு
மண்ணின் நிறம் அறியாதா
யார்தான் சுட்டிக்காட்டும் பொறுப்பை வைத்துக் கொள்வது
தோட்டத்து செடிகளை பாராமரிக்க  
சொந்தத்திற்கு தெரியாதா
யார் செய்தாலென்ன
வலிமட்டும் இங்கல்லவா வந்து விழுகிறது
குருவிகளின் கீச் கீச் குரல்களில்
மயங்காத மனமும் உண்டோ

Sunday, February 24, 2013


அத்திமர நிழலில்
அமர்ந்திருக்கும் இருப்பில்
தூரத்திலிருக்கும் நதியில்
ஆழ்ந்து கொண்டிருக்கும் வியப்பில்
உதிர்கிற பூ நிற கவிதைகள் உங்களுக்கு
வாய்த்திருக்கிறது தாத்தா
வண்ணம்வெளுக்காத சட்டையில்
படர்ந்திருக்கிற
ஒரு பூ வேணும் செம்மண் கறையில்
விழுந்திருக்குமா
தாத்தா

இ.................



இப்படி
துண்டு துண்டாக்கப் பட்ட
மீன்களின் சுவையை ருசித்துக் கொண்டிருக்கும்
முன்னும் பின்னும்
போதைகள் ஏறிக் கொண்டிருக்கலாம்
இறங்க ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தில்
மிதிபடும்
குரல்களின் உயிர்களை
கணக்கிடப்படாத வயதுகளின் நரைகள்
கரைந்து போய்விட்டதான பாடல்களை
உரக்க பாடிக் கொண்டிருக்கும்முடிவில்
வெற்றிடத்தை அறிய இயலுமாயின்
உதிர்ந்து போகும்
ரோமக் கற்றைகளாகிவிடுகிறது
காலம்








நகரத்தில் நெருக்கடிகள் அதிகரித்துவிட்டன
புழுக்க அவஸ்தைகளில்
தடுமாறும் வேகத்தில் அவசரங்களைத் தாண்டுகிறோம்
நிகற்று இழுத்துச் செல்லும் காலங்களுக்கு
கண்களோ காதுகளோ இல்லவேயில்லை
இறைதேடும் பயணங்களில் வெறிகொண்டு அலையும்
வேட்டைகளுக்கு நிர்பந்திக்கப் பட்டிருக்கும் வாழ்வை
பசிதானே தீர்மானிக்கிறது
இதில் ஒப்பனைகளும் வேசங்களும் மட்டுமே
மிஞ்சிவிட்டிருக்கும் இடத்தில் சந்தித்திருக்கிறோம்
பார்த்திருப்பீர்கள் அய்யா
எதிரே இருக்கைகள் எல்லாம்
காலியாகவேதான் நிறைந்து கிடக்கின்றன

Saturday, February 23, 2013

தடை............

தடை செய்யப் பட்ட பகுதிக்குள்
நுழையக் கூடாது என்பதன்
உள்ளடக்கம் தானென்னவோ
சங்கிலி வளையங்களால் மறுக்கப் பட்ட வழி
நிலையானது என்பதற்கான
வறைமுறைகள் ஏதாவது
அப்படியே ஆனாலும்
அந்த மறைமுகத்தின் முகவரி
எங்கு தான் போனதுவோ
எதனால்
என்பதில் தானே
இத்தனை தலைவலியும்