Thursday, December 20, 2012

புல்லாங்குழலோடு அழையும் கண்ணன்

   புல்லாங்குழலோடு அழையும் கண்ணன்



எஞ்சிய புல்லாங்குழலை மட்டுமே
தனதாக்கிக் கொண்டு

கொஞ்சி துயிழெலுப்பும் கோபியர்களை
அவரவர் வீட்டுக்கு திருப்பி
அனுப்பி விட்டு

உள்ளே அரித்துக் கொண்டிருக்கும்
எல்லா வேதனைகளையும்
புல்லாங்குழலால் இசைத்தபடி
அழைந்து கொண்டிருக்கிறான் கண்ணன்

மார்கழிக் கூதலில் பிரிந்த
கோபியர்கள் குமுறும் ஏக்கங்களெல்லாம்
வாசணைகளாய்
கண்ணனைச் சுற்றிய வனமெங்கும்
மிதந்து கொண்டிருந்தன

மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கூட
துாது சொல்லாத
வெகு துார வந்து விட்ட கண்ணன்

மார்கழிப் பாடல்களை
புல்லாங்குழலால் இசைத்தபடி
கடந்து போவதை அறிந்த மக்கள்

அறுவறுப்பான பட்டங்களை சூடியபடி
கடந்து கொண்டிருந்தார்கள்

வெறுத்துப்போய்
திருச்சி சாலை பக்கங்களில்

கொஞ்சகாலம திரிந்து கொண்டிருந்த கண்ணன்

 கதிரி“ கஸ்துாரி“ வசந்தா“ சிரிகரி
போன்ற பஞ்சாலை மில்களை

இயக்க வைக்கும் முயற்சிகளில்
தோல்வி கண்ட துயரங்களில்

நகரத்தை விட்டு காடுகளுக்கு
திரும்பியிருந்தான் கண்ணன்

தற்பொழுது
காடுகளையும் இழந்து விடும்
அபாயத்தில்

கையிலிருந்த புல்லாங்குழலை
பத்திரப்படுத்தி ஒரு முறை
உற்றுப்பார்த்து முத்தமிட்டு

ஓராயிரம் இசைகளோடு
நடையை கட்டுகிறான்

கோபியர்களின் கண்ணன்
 

 

No comments:

Post a Comment