Thursday, December 13, 2012

ஞாபா வின் வசீகர எழுத்துக்கள்



ஞாபாவின் வசீகர எழுத்துக்கள்


பொழியும் ஞாபாவின் எழுத்துக்களை
பொழியாது விழுங்கிக் கொண்டிருக்கும் பூதம்
தானே தின்று கொண்டு நெடுங்காலமாய்
வாழ்ந்து கொண்டிருந்தது
தனது இடத்தை பெரும் அகலமாய்
பரப்பிக் கொண்டுவிட்ட அதன்
வாழ்நிலத்தின்மீது வசீகரமாய்
ஞாபாவின் எழுத்துக்களை தவற விடாமல்
தனதாக்கிக் கொண்டு பூதம்
நாளடைவில் மிகவும் ஜொலிப்பின் நிறங்களாகி
மிளிர ஆட்கொண்டிருந்தது
எந்த மாற்றத்தின் கருணையோ
எந்த வெளிச்சத்தின் விசையோ
அந்த வசீகரபூதம்
ஒரே ஒரு நாள் எதிர்பாராது
செறிக்காத தனிமையின் பதற்றலுக்கு
ஆறுதலாய் என் மடியில் அமர்ந்து
சொல்லிக்கொண்டிருந்தது
எஞ்சிய மீத சதையையும் அதற்கு பரிசளிக்க
ஆயத்தமாகத் தான் இருக்கிறேன் என்பது
அது அறிந்ததோ இல்லையோ
தின்னத் தரும் அழுத்தத்தோடு அதனிடம் கூறினேன்
என்ன எதிர் பார்ப்போ இந்த அர்பணிப்பும் அரவணைப்பும்
அதனிடம் கூறினேன்
விரக்தியின் ஆற்றலோடு ஒரு முறை
நேராக பார்த்தபடிஆழமாக
சிரித்து விட்டு ச் சொன்னது பூதம்
சதை ருசி அழுத்துப் போய்விட்ட
பசியேதுமற்றநிறைந்த களிப்போடு தான்
இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறேன் இக் கணத்தில்
எல்லாம் நிறைவாகி விட்ட பொழுது
உண்மையைச் செய்யலாம்என்று
எண்ணியதன் விளைவு தான் இந்த பிரியம் என்றது பூதம்
தான் வழுங்க விரும்பாத நேரம்
ஞாபாவின் எழுத்துக்களை
இலகுவாக பொழியவிட்டதன்விளைவும் தான்
உனது இந்த கவிதைக்கு காரணம்
என்பதை நான் சொல்ல வருகிறேன் இளவேனில்
என்றது பூதம்
ஞா பா வின் எழுத்துக்களை ப்பற்றியல்லஎனது சங்கதி
விட்டுக் கொடுத்தபூதத்தின்கருணையும்
அதன் வரலாற்று மர்மத்தையும் தத்துவத்தையும்     
பற்றித்தான் என்கிறேன் நான்
வெற்றிடத்தின் எல்லா இடைவெளிகளிலும் உருவாவதுதான்
எங்களது சந்ததிகளின் முறை என்று சொல்லியபூதம்
சொற்களின் வெற்றிடத்திலிருந்து காற்றின் சப்தங்களோடு
மறைந்து போனதுஅது
எவ்வித முடிவையுமே சொல்லவியலாத கவிதையை இத்தோட நிறுத்தி விட்டு  விழித்துக் கொண்டிருக்கிறேன்
பாதி வெளிச்சமும் மீதி நிழலுமாய் என் மீது படிந்த கொண்டிருந்தது
இந்த நாள்

(இலக்கியமும் எழுத்தும் வாழ்வும் விட்டு விலக நேர்ந்த காரண புதங்கள் பற்றியல்ல எழுத்தின் எழுதவேண்டிய பிரியத்தின்ஈரமே இந்த வரிகள்)

(அய்யா ஞானபாரதி அவர்களுக்கு)

No comments:

Post a Comment