Wednesday, December 11, 2013

கார்த்திகைக் குளிருக்கும் பலம் அதிகம்


கார்த்திகைக் குளிருக்கும் பலம் அதிகம்     

மார்கழிக் குளிரை விட கார்த்திகைக் குளிருக்கும்  பலம் அதிகம் என நேற்று வரை தோன்றியது. நடு இரவில் விழிக்க வைத்து விடும் வித்தைகளை தந்து கொண்டு தானிருந்தது. ஆனால் இன்று மட்டும் குளிருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான விடையை நானறிவேன் மனம் மிகவும் பதற்றத்தைக் கொண்டிருப்பதை உணர்கிறேன். இந்த இரவுக்கான இருத்தல் தவிப்புள்ளதாகவே இருக்கிறது. மனமெல்லாம் பல வேலைகளுக்கான நினைவுகளைச் செரிக்க முடியாமல் அரைக்க இயலாத கிரைண்டரைப் போல முனகும் சபதங்களுடனே தவித்தபடியிருக்கிறது. நாளைக்கான சூழல்கள் மிக மிக பரப்புகளுடனே கழிந்து தானாகவேண்டும்  நெருக்கடிகள் கொண்ட இறுக்கத்திற்குள். சிக்கிகுண்டு கிடக்கிறது இந்த்த் தனிமை.

நாளை இரு வழக்குகளுக்கு நீதிமனறத்தில் ஆஜராக வேண்டும் அதே நேரத்தில் குறிப்பிட்ட அலுவலக வேலைகளையும் செய்தாக வேண்டிய கட்டாயம். எனது வழக்கரிஞரை நேற்று ச்ந்திக்க இயலவில்லை அவரும் வெளியுர் சென்றிருப்பதாக தகவலோடு தான் வெறுமனே நேற்று திரும்பியிருந்தேன். நாளை எந்த வித்த்தில் சமாளிக்கப போகிறேன் எனபது. சோதனையான கட்டம். . ஒவ்வொரு முறையும் இவ்வகையான மன உளைச்சல்களில் இறந்து பிறப்பதற்கான நிலைகளில் ஞாபகங்களில் வழிந்தோடும் அனைத்து நினைவுகளும் அழிந்து அழிந்து தான் பிறகு ஒட்டிக் கொள்கின்றன. சில அகோரமான நிசப்தங்களுக்குள் தொலைந்து விடுகின்றன.

தூக்கம் பிடிபடாத நிலை தற்பொழுது படுத்திருந்த பாயின் மேல் வரம்பற்று சிதறிக் கிடக்கின்ற நூல்களில். நுழைய முடியாத தடுமாற்றம். அதுமட்டுமல்லாது மேசையின் மீது இன்னும் கொஞ்சம் காத்திருக்கிறது. இவையெல்லாம் இன்றும் இரண்டு நாட்களுக்கு முன்னும் புத்தக கண்காட்சியில் வாங்கிவந்த சிறு குவியல் இந்த முறை சற்று பட்ஜெட்டுக்கு அதிகமாக உணர்சிவசப்பட்டுவிட்டேன்  கூடுதலாக புறச்சூழலாக அலைக்கழித்தாலும். அகச்சூழலில் ஆதம திருப்தி இருக்கத்தான் செய்கிறது .ஆயினும் இதற்கான தண்டணையிலிருந்து தப்பித்து விடமுடியுமா என்ன? பற்றாக் குறையின் வன்மத்திற்கு தாயாராகிவிடும் துணிவிற்கு வந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக நூலகத் தொகுப்பிலிருந்து  நகலெடுத்து வைத்திருந்த ஜார்ஜ் ஆர்வெலின். விலங்குப் பண்ணையை இப்பொழுதான் வாசித்து முடித்திருந்தேன். தமிழில் எஸ். சுப்பையா எனபவரின் மொழிபெயர்ப்பு நூல். இந்த நூலை அறிமுகப் படுத்தியது எஸ் ராமகிருஷ்ணனின் செக்காவின் மீது பனி பொழிகிறது. என்கிற கட்டுரைத் தொகுப்பில் ஜார்ஜ் ஆர்வெலின் இரண்டு மிகச் சிறந்த கட்டுரைகளை  பதிவு செய்திருக்கிறார். அதில்  ஒரு தண்டனைக் கைதியின் தூக்குக் காட்சியை விவரிக்கும் கட்டுரை. இன்னொன்று வன அதிகாரி ஊருக்குள் புகுந்து விட்ட ஒரு யானையைக் கொள்ளும் காடசியை விவரிக்கும் கட்டுரை எஸ் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போலவே மிக சிறப்பான கட்டுரைதான் எனைப் பாதித்த அளவில் நிரூபணமாகியிருந்த்து. அவரடைய எழுத்து அனுபங்களில் இந்தியர்களினுடைய பாதிப்பு அதிகமாக தென்படும் என்பதையும் எஸ் ரா. குறிப்பிட்டிருப்பார். அவருடைய கட்டுரைகள் பாதித்த அளவிற்கு நாவல்கள் பாதிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார். தமிழில் எஸ். சுப்பையா என்பர் மொழிபெயர்த்த விலங்குப் பண்ணை என்கிற குறிப்பிலிருந்து தான். நான் இந்த தொகுப்பை பத்திரப்படுத்தியிருந்தேன். இதுN போலி மார்க்சீயவாதிகளை பகடி செய்யக் கூடிய வகையான தொகுப்பு என்பது மிகச் சரியானது எனலாம். மனிதர்களை மிருகங்களுடனாக ஒப்பிடக்கூடிய கற்பனைக் களம். தீய செயல்களின் தரத்திற்கேற்ப மிருகங்களின் வகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது சிறந்த ரசனைக்குரியது. இந்த நாவலின் தன்மை பகடியின் உச்சம் எனலாம். நாவல் முழுக்க சலிக்காது விறு விறுப்போடு வாசகன் சென்றுவிடக் கூடும் நடை யுக்தி மிச சிறிய நாவல்தான் என்றாலும் இதன் அதிர்வலைகள் சாதரணமானதல்ல.

 தாஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நேற்றைய 40 பக்கத்தோடு வாசிப்பு தடைபட்டுக்கிடக்கிறது .மேலும் வாசிக்க ஏக்கம் கொண்டுள்ள நூல்கள் அலைத்துக் கொண்டிருக்கின்றன. வழக்கமாகவே வாசிக்க முயற்சித்து முடியாமல் பாதியிலே தூங்கிவிடுவது பிறகு முதுக்கடியிலிருந்து காலையில் மடங்கியிருக்கும் புத்தகங்களை ஒழுங்கு படுத்துவது அன்றாட நடைமுறைதான் .இம் நிகழ்வுகளை எதிபார்த்திருக்கும் என் அம்மாவோ, அப்பாவோ பாதியிரவில் எழுந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைப்பதை வழக்கமாக்கியிருந்தார்கள். இருவரும் முதுமையைத் தொட்டிருக்கிறார்கள். இன்னும் அம்மா சமையல் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரது சுறுசுறுப்பு நான் ஆச்சர்யப்படுபவைகளில் ஒன்று. நான் இன்னும் விழித்திருப்பதை அறிந்தால் எந்த அறிவிப்புமின்றி தேனீர் கைக்கு வந்து விடும். அப்பாவினால் அதிக துாரம் நடக்க இயலாது. அதிக நேரம் படுக்கையில் தானிருப்பார். (இப்பொழுதுகூட அப்பா அசைந்து படுக்கும் சப்தம் கேட்கிறது. எந்த நேரத்திலும் எழுந்து விடலாம். நான் விழித்திருப்பதற்குச் சாட்சியாக ஒருமுறை இருமிக் கொள்கிறேன்.)   .கிட்டத்தட்ட புத்தகங்களுடன் தாங்குவது வியாதியாக கூட ஆகிவிட்டதோ என்னவோ அடிக்கடி இப்படி குழம்பிக் கொள்வது எனக்கான இயல்பு.

புத்தகங்களுக்குள்ளான மனிதர்களை லயிக்கிற் சஞ்சரிப்பு ஏன் வெளியுலக மனிதர்களை துரக் கொண்டு போய்விட்டது. கிட்டத்தட்ட சில நண்பர்களுக்கு நான் கொஞ்சம் விலகியிருபதான உணர்வை ஏறபடுத்தியிருப்பதையும் தம்மால் உணர முடிந்தும். மாற்று திட்டங்களுக்கான எத்தனிப்புகளுக்குள் செல்ல முடியவில்லை என்பதே உண்மை.

நேற்று கடைக்கார்ரிடம் சிகரெட் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். வேறு என்ன வேண்டும் என்றார். நில்க்கடலை 100 என்றேன். எதையோ புரிந்து கொண்ட மாதிரி கடலையை பொட்டலங்கட்டத் தொடங்கினார்.நான் நினைத்த்து சரியாய்த் தானிருந்த்து.“அவரு வரலையா“ என்றார். யாருங்க என்று ஒப்புக்குக் கேட்டேன்.முகத்தைப் பார்த்தார். அவரது கருப்பு முகத்தின் மேல் டியுப் லைட் வெளிச்சம் கரை போல ஒட்டிக்கொண்டிருநத்து. “இன்னொருத்தர் உங்களோட வருவாரே“   “வந்துடுவார் வந்துடுவார் வந்துடுவார்“  கட்டுக்குள் நிற்காமல் மூன்றுமுறை உளறிக்கொண்டது போல முடித்தேன்.

நானும் இளஞ்சேரலும் பேசுவதை கவனித்துக் கொணடிருக்கும்  மளிகைக் கடைஉரிமையாளரானவர் சில சமயம்.வழக்கமாக என்னிடம் “அவரு வரலையா என்பார்“ யாருங்க எனக்கேட்டால் உங்க நண்பர் அடிக்கடி பேசிட்டிருப்பீங்களே என்பார். உணர்சிவசப்பட்டு ஒரு முறை நீங்க எழுதறீங்களே எவ்வளவு கிடைக்கும் என்றார். பணம் கிடைக்குமல்லவா? என்றார். இந்த மாதிரி கேள்விகளுக்கு சத்தியமாக பதில் சொல்ல தெரியாமல் திணறியிருக்கிறேன்.

நாம் ஏன். இந்த மாய வலைக்குள் மாட்டியிருக்கிறோம். இது மாய வலையே தானா? சராசரி வாழ்க்கை களுக்கான ஆசைகள் ஏன் நம்மை வசீகரிக்கவில்லை நமக்க ஏதோ ஒன்று குறைகிறதா? இல்லை மிகச் சரியான பயணம் தானா? இப்படியான சிக்கல்கள் மூழ்கிச் செல்லும். நிலையிலிலுந்து தான் மீண்டெழுவது இலக்கியமாகவே தான் அமைந்து விடுகிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால். “வேண்டா போயிடு “வேணடா போயிடு“ .என பாட்டிலைப்பிடிக்கும் காட்சியைப்போல இலக்கியத்தை தவிர்க்க இயலாத நிலை. ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் வரும் ஜனகராஜின் வசனம்தான்  பொருந்துகிறது.

டிசம்பர் இரவு இப்பொழுது  இரண்டாம் ஜாமத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இசை சப்தம் செவிகளில் விழுகிறது. கிருஷ்மஸ் பண்டிகையை ஞாபகப்படுத்த சிறு தொலைவிற்கப்பால் இசை முழக்கத்தோடு யேசுவின் பிள்ளைகள் ஊர்வலம் போகும் சலசலப்புகள் செவிகளில் விழுகிறது.  எந்தச் சூழலிலும் சுவீகரித்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு தான்னெபதை உறுதிசெய்து கொள்ளுகிறது மனம். கொஞ்மான நேரத்தில் அதுவும் இரவோடு கரைந்து போய்விட்டது. எந்த மகிழ்சியும் நெடுநேரம் நிலைப்பதில்லை போலும் இசை யின் சுருதிகளுக்குள் மனம் ஒன்றும் முன்பே கொஞசம் கொஞ்சமாக குறைந்து ஓரிரண்டு நாய்களின் குரல்களுக்கிடையே மாய மான வழியே நிசப்தமாகிவிட்டிருந்த்து.

நாளை புத்தக கண்காட்சி நிறைவு பெறுகிறது. முன்று நான்கு முறையான பயணத்தில். பார்த்து வைத்திருந்த பத்தகங்களை இன்று வாங்கியிருந்தென் இளஞ்சேரலும் நானுமாக அலைந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் புத்தகங்களை வாங்கிக்கொண்டோம்.

இன்று தமிழ்நாடு முறபோக்கு எழுத்தாளர் கலைஞர்களின் 150-வது இலக்கியச் சந்திப்பில்கலந்து கொள்ள முடியவில்லை.என்பது வருத்தமாகவேயிருந்த்து. அருவி இலைக்கிய அமைப்பின்.சந்திப்பில் நானும் இளஞ்சேரலும் கலந்து கொண்டோம். தாமதமாக சென்றதால் வான்கோவினுடைய ஓவியங்களை தவரவிட்டிருந்தோம்.  சி.மோகன்.சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நாவல் கலை சம்பந்தமான தமது கட்டுரையை வாசித்தார். பின்னர் கலந்துரையாடல் நிகழ்சியாக பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாவல்களில் ப.சிங்காரம். சம்பத்.ஆகியோரது நாவல்களை மிகவும் நெருக்கமாக உணர்வதாக கூறினார். தால்ஸ்தோயின் அன்னா கரினாவும்,மிலன் குந்தரேவின் நாவல்களும் எனக்கு ஆதர்சமானவை எனவும் குறிப்பிட்டார். ஜெயமோனுடைய நாவல்களில் தன்னை மட்டுமே முன்னிருத்தும் கூறுகளாகத்தான் உள்ளதாக குறிப்பிட்டார். விஷ்னுபுரம் வேண்டுமானால் நல்ல நாவல் வடிவத்தை ஒத்திருப்பதாகவும்.அதுவும் தானாக அமைந்திருப்பதாகவும் கூறினார். எஸ்.ராமகிருஷ்ணனிடம் நிறைய எதிர் பார்த்த்தும் பின் ஏமாற்றமடைந்த்தையும் குறிப்பிட்டார். சம்பத்தினுடைய இடைவெளி நாவலில் மரணத்தைப்பற்றியான புதிய கருத்துக்கள்ளை புதிய தாக்கத்தை உண்டுபண்ணிய படைப்பாக உணர்வதாக சொன்னார். கோணங்கியினுடைய நாவல்களில் அதிக நாட்டம் கிடையாது என்பதையும் முன் வைத்தார்.  எங்களது இருவருடைய தொகுப்புகளையும் சி.மோக்ன் பெற்றுக் கொண்டார் மேலும் “தமபான் தோது“குறித்த எனது கட்டுரை நகலை அவருக்கும் பலருக்குமாக கொடுத்தேன்  புவியரசு அவர்கள் எனது பெயரையும் எண்ணையும் குறிப்பிட்டு வாங்கிக்கொண்டார் சி. மோனுடைய நவீன உலகச்சிறுகதைகளின் பாதிப்பின் உரையாடலோடு விடைபெற்றோம்.      .      

 பாரதி புத்தகாலயத்திற்குள் தேடலினிடையில் சோ.ரவீந்தினையும் யோகா செந்தில் குமார் இருவரையும் சந்தித்தோம். சற்று முன்னால் அருவி இலக்கிய விழாவில் சந்தித்து விடைபெற்ற இவ்வளவு விரவில் இந்த இடத்தில் சந்திப்போம்மென அவர்களும் எதிர்பார்த்திரக்க மாட்டார்கள்.   தோழர் சோழநிலா இசைப்பிரியாவிற்கு அப்பாவான செய்தியை சொன்னார். அவருடைய மகள் ஓவியாவின் முகம் நினைவுக்குள் வந்து போனது. மகிழ்வோடு தோழருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் என்றேன். ரவீந்தரனிடம்.தாஸ்தாவெஸ்கியின்“குற்றமும் தண்டனையும்“பிடித்தே ஆகவேண்டும் என்ற வொர்த்தையோடு சோ.ரவீந்திரன் விடைபெற்றார். இன்று கூட்டம் பரவாயில்லை, இன்னும் மாலைநேரம் கூட்டம் அதிகரிக்கும் என இளஞ்சேரல் வினவினார். ஆச்சிலியின் (ராஜ்குமாரின்) வீட்டு விழாவிற்கு செல்ல வேண்டுமென இருவரும் காலையிலேயே முடிவு செய்திருந்தோம். அதன்படி ஊருக்கு திரும்பும் நோக்கத்துடன் புத்தகங்களை தேர்வு செய்து கொண்டிருந்தோம். தமிழினி வசந்த குமாரும் கோவை தியாகுநாலக உரிமையாளரும் அப்பொழுதான் புறப்பட்டார்கள் அவர்களுக்கு “தமபான்தோது“ சம்பந்தமான எனது கட்டுரை நகல்களை கொடுத்தேன். “புலம்.லோகநாதன் மட்டும் கடையில் இருந்தார். அங்கு வந்த மொழியெர்ப்பாளர் எஸ். பாலசந்திரன் எங்கள் இருவரைப் பற்றியான  விளக்கத்தைச் சொல்லி லோகநாதனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.. இளஞ்சேரலின் தொகுப்பை மகிழ்வோடு பெற்றுக் கொண்டார். சமபிரதாய விடைபெறலையேற்று ஊருக்கு திரும்பும் வழியில் இளஞ்சேரலுடைய நேற்று எழுதிய கட்டுரையை  பிரிண்ட் எடுத்து வாசிக்க்க் கொடுத்தார். வாங்கி பையில் போட்டுக்கொண்டு ஆச்சிலியின் விழாவிற்கு வந்து சேர்ந்தோம். மதிய விருந்தை முடித்துக்கொண்டு இருவரும் விடைபெற்றுக் கொண்டோம். இரண்டு மணிநேர ஓய்விற்குப் பிறகு இளஞ்சேரலுடைய கட்டுரையை வாசித்தேன். மிகவும் லாவகமாக பக்கங்களை கடந்து போகும் அலாதி சுகம் அதில் தென்பட்டது. மீடும் மீண்டும் படித்தேன். மனம் இருப்பு கொள்ளவில்லை. தானாகவே விரல்கள் இளஞ்சேரலின் எண்ணை அழுத்த்த்தொடங்கின.

இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அதாவது 10 -30-மணிக்கு இந்த கட்டுரையை எழுதத் தொடங்கியிருந்தேன்.   இப்பொழுது அதிகாலை 2-30 ஓரு பெல்லை அடித்து கடிகாரம் உணர்திக் காட்டுகிறது இந்த நிமிடம் ஒரு இரயில் ஆரன்சப்தங்களுடனும் சக்கரங்களின் தாள ஓசையுடனும் கடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது எந்த நாயும் சப்தமிடவில்லை. பூச்சிகளின் கீச் ஒலிகள் ஆணிகளின் கிறுக்கள்களைப்போல கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த கம்பிவலைகளின். திரைச் சீலையில் மெலிதான வலைவுகள் மட்டுமே அசைந்து கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை குளிர் நெருங்கவில்லை. ஒருவித இடைவெளிக்காகவும் காத்திருப்பதைப் போலவும் தென்படுகிறது. படுக்கைக்குச் செல்லப்போகிறேன். சிதறிக் கிடக்கும் புத்தகங்களை ஒழுங்குபடுத்தப் போவதில்லை முடிந்தால் அதனுடனான உறக்கம் கொஞ்சம் ஆசுவாப்படுத்தலாம்.

 


No comments:

Post a Comment