Monday, December 30, 2013

நிகழ் வழிச் சாரல்கள்



     

         நிகழ் வழிச் சாரல்கள்


-(புதிய மாதவியின் “சூரியப் பயணம்“ கவிதை தொகுப்பின் வழியே)         -    

-பொன்இளவேனில்

இது பனிக் குளிரில் நனையும் மாதம். கோதையை நினைகாமல் இருந்தால் இலக்கியத்தில் கூட விமோசனம் இல்லை. கோதையின் பாசுரத்தில் நாமும் கொஞ்சம் நனைந்தால் என்ன. .


 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர் மார்ப ! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் ! நீ  உன் மணாளனை
     எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
     த்த்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்,                        (19)


சயன அறையில் குத்து விளக்கு ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது. யானைத் தந்தத்தால் ஆன அழகிய வேலைப் பாடமைந்த கட்டில், அதன் மேல் அன்னத்தின் தூவி, மயில் பீலி, இலவம் பஞ்சு, செம் பஞ்சு  ஆகியன நிரப்பப் பெற்ற அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், வெண்மை, ஆகிய அய்ந்து உணர்வுகள் தாங்கிய மெத்தை விரிக்கப் பட்டுள்ளது. அந்த பஞ்ச சயனப் படுக்கையின் மேல் ஏறி. கொத்துக் கொத்தாக மலர்கள் சூடிய கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின். கொங்கைகளை மேலே வைத்துக் கொண்டுக் கிடக்கின்ற மலர் மார்புடைய கண்ண பெருமானே! உன் திருவாய் மலர்ந்து அருள்வாயாக! மை தீட்டப் பெற்ற கண்களையுடைய நப்பின்னைப் பிராட்டியே! நீ உன் மணவாளனை  சிறிது நேரம் கூட துயில் எழு விடமாட்டாய் போலும்! நொடிப் பொழுதும் கூட அவனை விட்டு நீங்கியிருக்க மாட்டாய் போலும்! இச் செயல் உன் நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தம் உடைய தாக இல்லையே!     

மார்கழி உற்சவத்தில் கரைந்து போவதும் கூட ஒருவித அர்பணித்தல் தான்.

இன்றைய இயந்திரத்தனமான சூழல்களில் தனியார் வகை நிறுவனங்கள் கூட தங்கள் நிர்வாக ஊழியர்களுக்கு  தியான வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் தருணம். . இது மனிதர்களின் மீதுள்ள அக்கரையா? அல்லது இன்னும் கூடுமானவரை சிதறிக் கிடக்கும் தனி மனித சிந்தனைகளை ஒன்றாக்கி அவர்களின் கூடுதலான உழைப்புத் திறனை பெருக்கிக் கொள்ளக் கூடிய ஆயத்தமா? எதுவானாலும், தொடர்நது கொண்டிருக்கும் சூழலில் சக்கரை நோயாலும் , இரத்த அழுத்த்த்தாலும் அதிக சதவிகித மனிதர்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் வேளை இது. அதாவது கோபத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடிய அத்தனை வைத்தியமாகவும் இம் மாதிரியான பயிற்சிகள் உதவட்டும்.


இப்போதைய மனிதர்கள் நாகரிகமாக கருதுவது, “வாழ்க்கையை அனுபவித்தல்,“ அதாவது சக மனிதர்களின் அவசரங்களானாலும்  ஆபத்துகளானாலும் .தவிர்த்து தமது வருத்திக் கொள்ளாத தப்பித்து தமது வாழ்க்கையை கேளிக்கைகளால் அனு அனுவாக ரசித்து, அதில் சொட்ட சொட்ட ருசித்து, ஒரு நாளின் முழு கணங்களையும், கூடுமான வரை தமதாக்கிக் கொள்ளும். நிலமை தான் இப்போதைய நாகரிக சூழல். முடிந்த வரை சிரித்து வாழலாம் துயர நிலை வந்தால் புழுங்கிக் கொள்ளலாம். நோயாகிலும் கூட மறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சகமனிதர்களுடனான இடைவெளி கேவலமானதாக கூட வருந்தும் நிலை. இந்த நிலையில் கோப ரசத்திற்கான இடம் யென்பது. இந்த சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது. கோபம் என்கிற உணர்ச்சியை குற்றவாளிக் குண்டான உணர்ச்சியாக ஒப்பிட்டுக் கொள்ளும் சமூகம் தான் இன்றைய சமூகம். இப்படியான நடை முறையை இதை வலியுறுத்திகிற மேல்தட்டு வர்க்கத்தின் சாயல்களாகவும் அரசு இயந்திரத்தின் சாயல்களாகவும் கூடவழியுறுத்தப் படுகிறது. இந்த நிலமையில் தான் சக மனிதர்களின் மீதான ஆதிக்கங்களும், அனுசரித்துச் செல்லக்கூடிய கீழ் நிலை மனிதர்களாகவும். வேறுபடுகின்றனர்.


சொல்லப் போனால் கோப உணர்ச்சிகள் மறைக்கப் படவேண்டியதாக நிரபந்தங்களை ஏதாவது ஒரு வடிவத்தில் இந்த சமூகம் நிர்பந்தப் படுத்துகிறது. கோப உணர்ச்சி என்பது இயற்கையான தா? செயற்கையானதா? என்கிற சந்தேகம் வலுப் பெற்றால். தன்மானம், சுய கௌரவம் என்பதற்கான இடம் எங்கே? தேடிப் பார்க்கவேண்டியதாய் தான் உள்ளது. கோப உணர்ச்சிகள் நோய்மையாக கருதும் நிலையில். கோபமே வராத, வரக் கூடாத  உணர்சிகளை என்னவென்பது? அதையும் நோய்மையின் வகையில் சேர்த்துத் தானாக வேண்டும்.. கோபமே இல்லாத இடத்தில் வேறு  என்ன! ஒப்பனையால் கொஞ்சுவதும். வெட்க்க்கேடாய் குலைவதும் தான் குல தொழிலாக்க வேண்டிவரும்.  இதில் யார் சமார்த்திய சாலிகள் எனபதில் தான் அடுத்தகட்ட போட்டிகள். தொடர்ந்து கொண்டிருக்கும்.     


புதிய மாதவி அவர்களின் கோபா ரசத்திற்கான கவிதைகளைக் கொண்ட சூரியப் பயணத்திற்குக் கொஞ்சம் வருவோம்..     
கவிஞர் புதிய மாதவியின் 1999-ஆம் வருடம் வெளியான முதல்கவிதைத் தொகுப்பு சூரியப் பயணம். இதற்குப் பிறகு கிட்டத் தட்ட கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள் என பதினொரு தொகுப்புகளுக்கு மேல் வெளி வந்திருக்கின்றன.. இவருடைய படைப்புகள் தமிழ் இலக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் பலர் பல இடங்களில் குறிப்பிடக் கூடிய பதிவு செய்திருக்கக் கூடிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
இவருடைய படைப்புகளில் பெண்ணியக் கருத்துக்களை அவர்களுடைய வாழ்வியல் சிக்கல்கள் குறித்து விரிவாக பேச முயல்வதாகவும், உணர்த்த முயல்வதாகவும். கொண்டிருக்கிறது.
 
                மதியைத் தொட்ட நேரம்
                   மயக்கம் பிறந்த்து ஏனோ?
                 மயங்க வைத்த விதியே
                   மரணம் பிழைத்தது. ஏனோ?“   (பக்கம்-76)


பெண்களின் வாழக்கைத் துயரங்களை கண்டு, பரிதவித்த உச்சமான வரிகளாக தொட்டதும், தொடாத்தும் என்கிற தலைப்பிட்ட கவிதையில் இவ்வரிகள் பதிவாகியிருக்கின்றன். மேலும் இவ்வாறான உணர்ச்சி பொங்கும் வரிகள். இந்த தொகுப்பு முழுதும் நிறைந்திருக்கின்றன.      இந்த்ச் சூரியப் பயணம் என்கிற கவிதைத் தொகுப்பு இதையே முன் வைக்கின்றன. இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள் ஆரம்ப காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக கோபா உணர்சிகளின் தடயங்கள் பெருகிக் கிடக்க்க்கூடிய கவிதைகளாக தெறித்துக் கிடப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. களம் கண்ட கவிதைகளாக அரங்கக் கவிதைகளும் இத்தொகுப்பில் பதிவாகியிருக்கின்றன.  சுயத்தை பற்றிப் பேச முற்படாமல், சமூகத்தின் பாதிப்புகளையே இந்தத் தொகுப்பு முன்வைத்திருப்பது. இந்த சமூகத்தின் மேல் இவருக்குடைய அதிகப் படியான அக்கறைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. மும்பை தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமான அடையாளங்களில் புதிய மாதவியும் ஒருவராக இவருடைய படைப்புகள் வழி அறிந்து கொள்ள முடிகிறது.     

இந்த சூரியப் பயணம் தொகுப்பிற்கு நாஞ்சில் நாடன் அவரகளின் வாழ்த்துரையால் அலங்கரிக்கபட்ட தொகுப்பு என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.  பிரச்சார தொனிகளை அதிகம் கொண்டிருந்தாலும் அவர் கடந்து வந்திருக்கும் அனுபவம் தமிழ் சூழலில் குறிப்பிட்ட உயரத்தை என்பதையும் மறுக்க இயலாது. இவருடைய முதல் தொகுப்பை வாசிக்கும் எனக்கான அனுபவம் என்பது வளர்து நிறைந்து வந்து விட்ட கிணற்று நீரின் மேல் தளத்திலிருந்து. முதல் துளியை நோக்கி புறப்படும் ஒரு நீச்சல் காரனின் பயணம் போன்ற அனுபவத்தை இந்த சூரியப் பயணம் எனக்கு தந்திருக்கிறது.


கடந்த வாரம (சனி,டிசம்பர், 21- 13) தி,இந்து நாளிதழில் வெளி வந்திருந்த செய்தி  மிகவும் வருத்தமடையச் செய்தது.  சிறைக்குள் மடியும் கைதிகள் மரண தண்டனை விதிப்பது யாரோ?என்கிற தலைப்பில் ஆர்,சிவா, என்பவர் தொகுத்திருந்தார். அதன் விளக்கம் பின் வருமாறு. சிறைகளில் மரணம் அடைந்தவர்களின் பட்டியல் விவரம். (2000 -ல் 69,) (2001, 76,) (2002, 90), (2003, 107), (2004, 103), (2005, 102), (2006, 116), (2007, 78), (2008, 74), (2009, 65), (2010, 79), (2011, 64,) (20012, 62,). தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள், 3 பெண்கள் சிறைகள், இளம் குற்றவாளிகளுக்கான ஒரு சிறை, மற்றும், மாவட்ட சிறைகள் உள்பட, மொத்தம், 136 சிறைச் சாலைகள். இவற்றில், 22 ஆயிரம் கைதிகள் அடைக்க முடியும். தற்பொது 14ஆயிரம் கைதிகள் வரை உள்ளனர்.. சேலம் மத்திய சிறையில் 1995-ல் ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கர் தூக்கிலிடப் பட்டார். அதற்குப் பிறகு யாருக்கும் தூக்குத் தண்டனை நிறை வேற்றப் படவில்லை. ஆனால், தமிழக சிறைகளில், 4, நாளுக்கு ஒரு கைதி மரணமடைகிறார். தமிழக சிறைகளில் 2000-ம் ஆண்டு முதல், 2012-ம் ஆண்டுவரை, 1,095 பேர், மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நோய் ஏற்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப் படாமல் இறந்த தாகவே கூறப் படுகிறது. ஒரு சிலர் மட்டுமே போலீஸ் தாக்குவதால் காயம் ஏறப்பட்டு மரணம் அடைகின்றனர். இநத இரண்டுமே இயற்கையான மரணம் இல்லை என்பது மட்டும் உண்மை. ஒரு சிறையில், விசாரணைக் கைதிகள். தண்டனைக் கைதிகள். என இரண்டு பிரிவில் கைதிகள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் உத்தரவால் மட்டுமே அடைக்கப் பட்டவர்கள். ஆனால் அதற்குப் பிறகு, சட்டமும் நீதியும் சிறைகளில் கடைபிடிக்கப் படுவதில்லை. சிறைகளில் தினமும் காலை 6 மணிக்கு கைதிகளின் அறைக் கதவுகள் திறக்கப் படும்.   

அப் போது பட படக்க எல்லோரும் முண்டியடித்து ஓடுவார்கள். வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்கள் ஓடுவது கழிவரைக்குத் தான். 100 பேர், 200 பேர் ஓரே நேரத்தில் முற்றுகையிட்டாலும். அங்கு இருப்பது என்னவோ 6,அல்லது 7 கழிவறைகள் தான். ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர்களுக்கு பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில் அந்த கழிவறைகள் மிகவும் மோசமாகிவிடும். அதற்குப் பிறகு வரும் வரும் ஒவ்வொருவருக்கும் தொற்று நோய் உறுதி. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசவன் என்கிற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பதான தகவலும் அவரது பேட்டியும் அச் செய்தியில் பதிவாகியிருக்கிறது. 

எழுதாத கவிதை

என் சின்னக் குயிலே!
நல்ல காற்றுக்கும்
நாயாய் அலையும்
நரகர் காட்டில்,
உறக்கம் மறந்த
புழுக்க இரவில்
நீ ஏன் உதயமானாய்?

நீ பாடும் முன்பே
குரல்வளை பறித்த
பாவையின் வயிற்றில்
ஏன் பயணம் தொடங்கினாய்?

தாய் பார்க்காத முகமே...!-என்
தமிழ் படிக்காத மனமே...!
அச்சில் ஏறாத எழுத்தே-என்
எழுதாத கவிதை நீயே!              (பக்கம்-16)


என்கிற புதிய மாதவியின் கவிதை வரிகளை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. இம் மாதிரியான வெளிச்சத்திறகே வராத, வெளிப் பார்வைகளுக்குள் நுழையாத மனித வதைகளை உயிரிழப்புகளை பற்றியான உலகத்திற்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் ஏன் சமகால இலக்கிய வரையறைக்குள் வரவில்லை. இப்படி நடைமுறை வாழ்க்கை சூழலில். சர்வ சாதாரணமாகி விட்ட மனித உயிர்களின் இழப்புகள் மற்றும் அதன் சிதைவுகள். குறித்த மனப் போக்கு அன்றாட நிகழ்வுகளாகி விட்ட வெறும் செய்திகளாகவே வாங்கிக் கொள்வதும். பின் மறந்து விடுவதுமான இயல்பு நிலைகளில் ஒன்றாகவும்  ஆகியிருக்கிறது. அதி தீவிரமான கட்சி இயக்கங்கள், அதி தீவிரமான மத நம்பிக்கைகள், அதி தீவிரமான பேராசைகள், அதிதீவிரமான உறவுச் சிக்கல்கள், அதி தீவிரமான கட்டுப்பாடுகள் அதி தீவிரமான போதைகள். என தொடர்ந்து கொண்டிருக்கும், உயிர் இழப்புகளில் எண்ணிலடங்காத வகைகளாக பிளவு  கொண்டிருக்கிறது. மனித இனம். லாபகரமான உலக கேளிக்கைகளிலும், உலக விளையாட்டுகளிலும், ஊடகங்களும், அரசாங்கமும்  காட்டும் அக்கறை. ஏன்  உயிரிழப்புகளில் காட்டுவதில்லை. காடுகள், மேடுகள், புதர்களென. வனாந்தரங்களெல்லாம் சுற்றி விலங்குகளை கணக்கெடுக்கும் துள்ளியமும் கூட சிறை வாழ்க்கை மனிதர்கள் அவர்களின் உயிரிழப்புகள் பற்றி கவலை கொள்ளாதிருப்பது. அதிர்ச்சிக் குள்ளாக்குவதாகவே யிருக்கிறது. 


நிகழ்கால செயல்பாட்டாளர்களின் சாதனையாளர்களின். இருத்தல்கள் தம்மை மட்டுமே முன்னிருத்திக் கொள்ளக் கூடிய அறபத்தனங்களைக் கொண்டிருக்கிறது. தாம் முன்னெடுத்துச் செல்லக் கூடிய இளைய தலைமுறை களை பொது நோக்கோடு அனுகுகிற பாங்கு என்பது தற்போதைய இலக்கியச் சூழலில் மலிந்து போய்விட்டது. தம்மை சுற்றியுள்ள வட்டங்களை துதிபாடுகிற சபைகளாக முன்னிருத்திக்கொள்ள எத்தனிக்கிறது. இதில் பொது நோக்கோடு அனுகுகிற கலைமனம். பின்தள்ளப் படுகிறதை அறியாதவர்கள் இல்லை. சந்தை மயமாகி விட்ட இலக்கிச் சூழலிலும் அவரவர்களுக்கான நிலையை தமது சுயத்திற் கேற்ப்ப அமைத்துக்கொள்கிறது. அதற்க்கான வியுகமாக தன்னந் தனியான பல விதமான வர்ண அடையாங்களை மறைமுமாக்கி சாணக்கியத் தனங்களால் தகர்த்து விடக் கூடிய தேர்ந்த வித்தைகளை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறது. என்பதை சற்று ஆழ்ந்த பயணத்தின் அனுபவங்களால் மட்டுமே உணர்நதுகொள்ள முடிகிறது. உழைப்பிற்கு துளியளவும் செவிமடுக்காத இதயங்கள். பழி வியுகங்களால் அல்லது நிராகரிப்புகளால். உதறுகின்ற, காணாது கண்டு போகும் சூத்திரங்களை பாங்காக கையாளவும் தயங்குவதில்லை..    நகுலனின் தீட்சண்யமான வரிகள் இந்த இடத்தில் ஞாபகத்திற்கு வருகிறது.


உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
இருப்பதற்கென்று தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

கவிதைகளில்  துயரஙகள் மிஞ்சியிருக்கக் கூடாது. கசப்புகள் மிஞ்சியிருக்கக் கூடாது. சுய கழிவிறக்கம் மிஞ்சியிருக்கக் கூடாது  என, ஆளுக் கொரு பாதகைகளைத் தாங்கிக் கொண்டு வரிசைகளில் நிற்க்கும் இலக்கிய ஆய்வு மேதமை (பயங்கரம்) படாடாபிகளுக்கிடையில். அனுபங்களின் வரிகளெல்லாம வெளிச்சமாக சிந்திக் கொணடு போகும் சுகங்களில் கவிதைகளின் முச்சு. கலங்க மற்று சுற்றுகிற காற்றாகிறது. 


கோபத்திற்கும் ஞானத்திற்கும் இடையில்  ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அனுபவ முக்தியின் வடிவங்கள் தான் பயணிகள். அதிகாரங்களின் கண்ணீர்களுக்கும். அடிமைகளின் அதிகாரத்திற்கும். இடையில் ஓடிக் கொண்டிருக்கும் ஓரங்க நாடகங்களின் காட்சியில். நிதர்சனங்களெல்லாம் வெறும் பார்வையாளராக, தொலை தூர இருக்கைகளில் அமர்ந்து. ஆடாத ஆட்டங்களையும் காணாத வேசங்களையும் காணவேண்டிய கட்டாயங்களில் கிடக்கிறது


“யாருமே இல்லாத உலகில்
என்ன தான்
நடந்து கொண்டிருக்கிறது இங்கு“


இந்த ஞானக் கசப்புகளின் தீராத ஆட்டங்கள் தான்.  நகுலனின வரிகளில் முன் நிற்கிறது..

        (37-வது கோவை இலக்கியச் சந்திப்பில் வாசிக்கப் பட்ட கட்டுரை)
             






No comments:

Post a Comment