Saturday, July 16, 2016

செல்லக் கிளிகள்


குறை கூறும்
கிடங்குக்குள் இ்ருந்து
தவித்தபடியிருக்கும்
நிலைமை
எதுவும்.கற்றுத்தறாதா
செல்லக் கிளிகள்
ஏன்
திரும்பத் திரும்ப
ஒன்றை
ஒரே சாயலில்
சொல்லுகிறது

பகல்கள்


உள்ளங்கைக்குள்
அடங்கிய உன் பகலை
ஆரஞ்சு பழத்தொப்பையென
உரிக்கும்பொழுது
தடுமாற்றங்களும்
சிற்சில பொய்களும்
மறைக்கப்பட்ட அறை
ரகசியங்களும்
விரல்கள் நனைக்கும்
ஈரமென
கசிந்து நிரம்புகிறது
அறிந்தும் அறியாததைப் போல
இன்றைய நம் பகலின்
சிறு துண்டைப் பிய்த்து
ருசித்துக்கொள்கிறோம்
அவரவர்களின் பகல்கள்
மற்றவர்கள் கைகளில்
அருஞ்சுவை

வெட்டி வேலை செய்பவன்


அவனிடம்
யாரும்
குழம்பிக் கொள்ள தேவையில்லை
அவனிடம்
யாரும
நம்பிக்கை கொள்ள தேவையில்லை

அவனிடம்
யாரும்
நேரத்தை வீணாக்கி விட தேவையில்லை
இந்த உலகத்தில்
ஒருவன்
வெட்டிவேலை செய்கிறான் என்றால்
அன்பைப் பற்றி
காதலைப்பற்றி
கடவுளைப்பற்றி
சதா
பினாத்திக் கொண்டே யிருப்பவனாகத்தான்
இருப்பான்
அவனிடம்
யாரும்
தங்களின் பொன்னான நேரத்தை
செலவிட வேண்டிய அவசியமில்லை
அந்த நேரம்
தங்களின் செல்ல நாய்க்கு உணியெடுத்து
நெருப்பில் வீசிக்கொண்டிருக்கலாம்
கச்சிதமான உடையமைப்புளுக்கான
தேர்ந்த தையல்காரரொருவரை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம
விருப்பத்திற்குரிய
நெகச் சாயத்தை ஆன் லைனில்
வாங்க முற்படலாம்
ரகசியம் சார்ந்த உற்வுமுறைகளுக்கேற்ப
வீரியத்திற்க்கான மூலிகைகளை
நெருங்கிய நண்பர்களிடம்
ஆலோசணை கேட்க ஆவலாகலாம்
ஆகவே
தங்களின் பொன்னான நேரத்தை
விரயமாக்கிவிட தேவையேயில்லை
அப்படிப்பட்ட ஒருவனுக்காக
யாரும்
வருத்தப்படவும் தேவையேயில்லை
நாட்கள் வீணாக
வரவே வராத.வருகைக்காக
இறங்கவே இறங்காத
பறவைகளுக்காக
எதற்காக
சொற்களை இறைத்துக் கொண்டிருக்கிறாய்

கை சூப்பி


புரிந்து கொள்வதற்கும்
புரியாமலிருப்பதற்குமான
பெயர் குழப்பங்கள்
பெரும்
சிரமத்திற்குள்ளாக்குபவை

கவிஞனொருவன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
விமர்சகன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
புரட்சியாளன்
அழுதான்
என்று
சொன்னார்கள்
புரியவில்லை
கைசூப்பி அழுதான்
என்று
சொல்லியிருந்தால்
இத்தனை மெனக்கெடல்கள்
தேவைப்பட்டிருக்குமா
கனவே

தழும்புகள்


இன்னும் தழும்புகள்
மறையவில்லை
அன்பை
பிரியத்தை
காதலை
முத்தங்களை
இன்னும் பிற
சொச்சங்களை
மூக்குக் கண்ணாடியைப் போல
இறக்கி வைக்கிறேன்
மேலும்
கொஞ்சம்
இடைவெளிக்காக
கண்ணீருக்காக
துயரத்திற்காக
மறைப்பதைப்போலான
நிர்பந்தங்களுக்காக

டா டா


கையசைக்கிறேன்
இரவே
அதற்குள்
ஓட்டத்தை
துவங்கிவிட்டாய்
எனை இழுத்து வந்து
தூர
எறிந்துவிட்டு
திரும்பிக் கொண்டிருக்கிறாய்
பகலின் அரக்க சப்தங்களுக்கு
இரையாக்கும் படி
யார்.உத்தரவிட்டது
ஆயினும்
வாழ்த்துக்கள்
போய்
வா
இரவே
டா டா