Friday, June 24, 2016

ஆழம்


துளியின்
நுனியிலிருந்து எழும்பும் பாடல்
ஆழத்திலிருந்து எழுகிறது
இசையின் வயதைக் கணக்கிட
பல ஆயுள்கள் தேவை
வயது
கூடுகளாகி காய்ந்துகிடக்கும்
வெட்டிச் சருகு
ஓடும் பகல்களுக்குள் ஒளிந்து கொள்ளுதல்
சாலச்சிறந்ததின் அமசம்
அதுவே அழைத்தும் செல்லும்

அலாதி


சைவம் மாமிசங்களை அருந்தாது
போதும்
கிளிகள் பழங்களை கொத்துகின்றன
மலைக்குன்றின் இடைவெளியில் நுழையும்
காற்றுக்கென்ன அது அதன்வழி தேடுகிறது
முடியாக் கூகைகளுக்கு பெரிதெதற்கு வெறும் கண் போங்கடா
முயலின் வெண்மை ஓட்டம் வேகம் மட்டுமா
அழகே அதனிலும் அலாதி
கைவசமிருக்கும்
ஊசிகளில்
தேவையானவற்றை
நிரப்பியாகிவிட்டது
யாரைக் கொன்றது
யாரைக்கொல்வது
யாரை மயக்குவது
யாரை வீழ்த்துவது
பின்வரும்
அட்டவனைகள்
சாதாரணமாக
தட்டுப்படுவதில்லை

ஈரம்


தேசம் முழுதும் திரிந்தாலும்
இங்கு தான்
இறங்கியாக வேண்டும்
பறவைகள்

Wednesday, February 24, 2016

மென்மையை நெஞ்சோடு ஒத்திக் கொள்பவர்
எவன்
நாண்டுகிட்டாலென்ன
அந்த பட்டாம் பூச்சி
ஒயர்க் கோடு போட்டுக் கொண்டு
சிறு
படக்
சிறு
படக்
சின்னஞ் சிறு
படக்
என
பறந்து
போவதாக
ஹா..ஹ
ஹா..ஹ..வென
குரலெலுப்பி
மென்மையால் ஊது
யார் வேண்டாம் என்கிறார்கள்
எவள்
துாக்கில்
தொங்கினாலென்ன
வெகு சுத்தமாக
கலைக்கான
நளின வனப்பை
நெஞ்சோடு ஒத்தி கண்களை
முடிக் கொள்
கருமம் புடுச்சவனெ
காலம்
இன்னும் ஏண்டா
உங்களெல்லாம் விட்டுவச்சிருக்கு
எளிய சொல்



மிக
எளிய
சொல்
கேட்டாய்

மிக
மிக
எளிய
சொல்
தந்தேன்
ம்..
கூ....ம்
என்றாய்
கொஞ்சம்
யோசித்து
மிக
மிக
மிக
எளிய
சொல்லை
சொல்ல
விரல்
அசைத்தேன்
சூழலை
விட்டு
தப்புவித்தாய்
வெட்கங்கள்
சிதற
திரும்பி
ஒடுகிறது
அலைகள்
முடிவாகிவிட்டது
தலைகீழாய் விழும் நட்சத்திரங்கள் கனலடங்காஆழத்தில் திடுக்கென மரிக்கிறது
அபத்தங்களுக்கு
பலியாகும் நேரத்தில்
முதுமைக்குழந்தை நீ
புன்னகை மாறா
அம்சங்களுடன் கை அசைப்பாய்
அந்த பரிதாப நிலைக்கு சற்று தொலைவில் புதைபடுவது இந்த அசைவுகளும் தான்