Tuesday, December 9, 2014

கறுப்பும் சிவப்பும்
நிறைந்திருக்கும் அடையாளங்கள்
கரைந்து கொண்டிருப்பதை
யாருமே அறியவில்லையே
இப்பொழுதை சொக்கி கழிப்பவர்கள்
அப்பொழுது துடிப்பதை
இப்பொழுது காண்கிறேனே
பின்பொழுதை
முன் சொன்னால்
சங்கடம் இங்கல்லவோ
வேக்காடாய்
திரிந்து கொள்ளும்
சந்தர்பங்களில்
ஏன்
இங்கு மட்டும்
கறுப்பும் சிவப்பும்
கோபுரங்களின் நிழல்களில்
கண்ணயர்வதல்ல
காலம்
கண் கூச
கூரையிலிருந்து
கோபுரங்களுக்கு பறக்கும்
இறகுகளாகிறது
காதில் வந்து நுழைந்தது
ஓடையுமல்ல
நீருமல்ல
நீச்சலென்பது முற்றிலும் வேறு
இந்தக் காற்றுக்கு ஆயிரம் கால்கள்
புன்னகைக்குள் பொதிந்து அசையும்
வர்ணங்களை புரிந்து கொள்ள இயலாதா
துளி அசைவில்
இலைகளின் படபடப்பை உணர்வதில்லையா

பொன்னந்திஅறியாததா
அந்த உடலின் வால் அங்கிருப்பதை
உயரமே ஆகினும்
வலிஒன்று தானே
பக்கங்களில் பூரித்துக் கொள்வது
பக்குவத்தையல்லவா
அடையாளப் படுத்துகிறது
தயவு கூர்நது
சரிப்படுத்திக் கொள்
உன்னதமே
மிகுதியாகிவிடுகிறது தடவும் காற்றின்
நச்சரிப்புகள்
நாய் நக்குவதைப் போலதான்
குளிரின் ஈரமும்
குளிர் நாக்கின் வன்மை
இதமானதுதானென்றாலும்
உடல் குலுங்கத் தானே செய்கிறது
சின்ன அறுவறுப்பின் சாயலில்
வை
விளக்குச் சுட்டிகளில்
சரக்குகள் இலலை
எரிகிற தீப இலைகள்
மங்கிக் கொண்டு வருகிறது
வெளிச்சமன்றி
குதுாகலிக்கும் கொசுக்களுக்கு
பலியான வலியில்
உதறிக் கொள்ளும்
கால்களை தள்ளிவைத்து
ஆடிக் கொண்டிருக்கும்
நகைச் சுவையாட்டங்களில்
பலனில்லை
சொம்பார்
ஆடுகிற பகடியில்
பெயர் பெற்ற கிளியனே
இது கூவியிருக்கும்
குறுஞ்சொல்லை
நொடிப் பொழுதில்
சிறுத்திருந்து
வை