Saturday, July 16, 2016

காதல் மணக்கும் கவிதைகள்


வயதென்னும்
பொருட்டில்லை காதலில்
உன்வயதைக் கொண்டு
என் காதலையல்லவா
பரிசீலித்தாய்
நீ
பார்க்க
ஆறாய் ஓடுகிறேன்
நரை வயதை வைத்துக்கொண்டு
இத் தடத்திடல்
........................
என்செய்வாய்
நிறத்தோனே
தோல்வியென்று
எதுவுமில்லை
இளமைக்குத் தெரியும்
ஒரு வேளை
என் பிரியத்தில்
தடுமாற்றமிருந்திருந்தால்
கூட்டத்தோடு அலலவா
கொன்றிருப்பாய்
எக்காளமிடும்
வயதிற்கும் புகழுக்கும்
சம்பந்தமில்லாத
காதலை
உள்ளங்கையில் வைத்தல்லவா
விளையாட்டாக்கினாய்
அன்பே
வெற்றி எனபது
காதலில்
ஆயினும்
வெறுப்பில்லை
உன் நடத்தையில்
வயதும்
கூட அழகு தான்
தரைக்கு வந்துவிட்டேன்
நிறத்தோனே
தாராளமாக
பூக்களோடு வரலாம்
இத் தடத்தில்

காதல் மணக்கும் கவிதைகள்


ஏற்பாடுகளாகிவிட்டதா
குறிப்பிட்டபடி
திட்டங்கள்
நடைபெறுகிறதா
எல்லாம்
நினைத்தபடி
நடந்து கொண்டிருப்பதானால்
காதலென்கிற வார்த்தையால்
கொலையாட்டங்கள்
நிறைவடையட்டும்

காதல் மணக்கும் கவிதைகள்


காதல்களுக்கல்ல
அழகுகள்
அது
வெத்துப் பொல்லைகள்
ஈர்ப்புகள்
அற்ப காட்சிகளுக்கு மட்டுமே
காதல் குறிகளற்றது

காதல் மணக்கும் கவிதைகள்


அலைப்புகள் புதைந்திருக்குமிடம்
மவ்னத்தின் உள்.அறை
அல்லது
பகட்டுகளின் நிழலிடம்
ஓராயிரம்
சொற்களுக்கிடையில்
பவனி வரும்
ரகசியங்களின்
நுனிப்பிடி
திசையேதோவொன்றில்

காதல் மணக்கும் கவிதைகள்





அடையாளங்கள்
புழுத்துப் போகட்டும்
பறந்து செல்லும் வழி
காதலாகா அந்தரத்தில்
இறுக்கிக்கொள்ளும்
அறைகளுக்குள்
கணக்குகளின் ஆட்சி
நாட்காட்டியின் சதுரங்களில்
உரசும் உடல்கள்
பேராசைகளை கக்குகிறது
காமத்தின் புழுக்கைகள்
அகற்றப்பட்ட கணத்திற்குள்ளிருந்து
புனிதையர்களின்
வருகைகள்
பதிவாகி உயிர்க்கிறது
மாதிரிகள் அமோகமாகி
வழியும் நாட்களுக்குள்
நீயும் நானுமாகி
அவளும் அவனுமாகி
நுழையத் துவங்குகிறோம்
இரவுகள்
எப்பொழுதும் போல்
இறுதிக் கட்டத்தை
முடித்துக்கொள்ளப் போகிறது
கவிதை



விலாசத்தைக் கண்டடைய
வனாந்தரத்தில்,
சாலையில்
இருளில்
பகலில்
நாட்களில்
நொடிகளில்
திசைகளில்
கணக்கிற்குள் வராத
இணடு இடுக்ககளில்
காலங்களில்
நிறத்தில்
ஆயுதத்தில்
ஆணில்
பெண்ணில்
திரு நங்கையில்
குழந்தையில்
காப்பியங்களில்
இதிகாசங்களில்
வியர்வையில்
நீர்
நிலம்
ஆகாயம்
நெருப்பு
புகை
பூ
இன்னபிற அனைத்திலும்
கண்டடையலாம்
துாரத்து நிகழ்வு



பாரம் தாங்காத நிலத்தில்
இருப்பும், தீனியும் தடைபடுதா
அங்காலாய்ப்புகளுக்குள்
உட்கார்ந்து
ஆசையைக்கு மட்டுமே
வார்த்துக்கொள்ளும்
புகழின் குழந்தைக்கு
பசிக்காது நிரப்பிக் கொண்டிரு
தத்துவங்கள்
செரிமாணத்துக்கல்ல
மணடியிட்டு
நிரப்பிக் கொள்ளும்
இடத்திற்கு அல்ல கவிதை
அவ்வுயிர்
நிஜ ஊற்றின் ஆதாரங்கள்
இம் மலையிலிருந்தே
வழிகிறது
வுன் கண்கள்
மலைக்குவொரு
செடி கொடி போல துாரத்து நிகழ்வு
நிலத்தின் ஈரத்தில் படியும்
நிழல்களில்
யாமாகவே நிறைகிறது கவிதை