Monday, January 19, 2015

கரையைச் சேராத சப்தங்களுக்குள்
அமைதிக்கு பாதையில்லை

கொடுக்கப்பட்டிருக்கும்
அவகாசங்களுக்குள்

வாசமிடும் நர்த்தனங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கட்டும்

அதனதன் வீக்கம்
அதன்களை வெளிப்படுத்தும்

காலங்கள் அழிந்து போவதற்க்குள்

அதன் கண்களை குருடாக்க
இயலுமாயின்

தேசம் திரும்பிப் படுக்கட்டும்

Tuesday, December 9, 2014

கறுப்பும் சிவப்பும்
நிறைந்திருக்கும் அடையாளங்கள்
கரைந்து கொண்டிருப்பதை
யாருமே அறியவில்லையே
இப்பொழுதை சொக்கி கழிப்பவர்கள்
அப்பொழுது துடிப்பதை
இப்பொழுது காண்கிறேனே
பின்பொழுதை
முன் சொன்னால்
சங்கடம் இங்கல்லவோ
வேக்காடாய்
திரிந்து கொள்ளும்
சந்தர்பங்களில்
ஏன்
இங்கு மட்டும்
கறுப்பும் சிவப்பும்
கோபுரங்களின் நிழல்களில்
கண்ணயர்வதல்ல
காலம்
கண் கூச
கூரையிலிருந்து
கோபுரங்களுக்கு பறக்கும்
இறகுகளாகிறது
காதில் வந்து நுழைந்தது
ஓடையுமல்ல
நீருமல்ல
நீச்சலென்பது முற்றிலும் வேறு
இந்தக் காற்றுக்கு ஆயிரம் கால்கள்
புன்னகைக்குள் பொதிந்து அசையும்
வர்ணங்களை புரிந்து கொள்ள இயலாதா
துளி அசைவில்
இலைகளின் படபடப்பை உணர்வதில்லையா

பொன்னந்திஅறியாததா
அந்த உடலின் வால் அங்கிருப்பதை
உயரமே ஆகினும்
வலிஒன்று தானே
பக்கங்களில் பூரித்துக் கொள்வது
பக்குவத்தையல்லவா
அடையாளப் படுத்துகிறது
தயவு கூர்நது
சரிப்படுத்திக் கொள்
உன்னதமே
மிகுதியாகிவிடுகிறது தடவும் காற்றின்
நச்சரிப்புகள்
நாய் நக்குவதைப் போலதான்
குளிரின் ஈரமும்
குளிர் நாக்கின் வன்மை
இதமானதுதானென்றாலும்
உடல் குலுங்கத் தானே செய்கிறது
சின்ன அறுவறுப்பின் சாயலில்